ஸ்ரீ தாயுமானவர் - திருச்சிராப்பள்ளி
மார்கழி மாதம் இயற்கையிலேயே அதிக ஈதர் நிறைந்த, சுத்தமான காற்றினை அதிகாலை வேளையில் அள்ளி தூவும் காலம்.திருப்பாவையும் திருவெம்பாவையும் அதிகாலை வேளையில் கேட்பதே ஒரு தெய்வீக சுகம்.அதுவும் ஒருவர் கோவிலில் அழகிய மெட்டுகளில் பாடுவதும் அதை கேட்பதும் ஒரு தனி சுகம்.பனி ஒருபுறம் இருந்தாலும் அதிகாலை ஸ்நானம் செய்து பெருமாளையோ ,சிவபெருமானையோ வணங்குவது அதி உன்னதமானது. காவிரியில் நீராடி நடந்தே வடகரைக்கு அருகில் உள்ள ஸ்ரீரெங்கநாதரையும் , தென்கரைக்கு அருகே உள்ள மலைக்கோட்டை தாயுமானவ ஸ்வாமிகளையும் தரிசனம் செய்தார்கள் அந்த காலத்தில்.காவிரியில் நீர் வரும் பொழுது குளித்துவிட்டு , குறைந்தபட்சம் வாகனத்திலாவது சென்று பெருமானை வணங்க வேண்டும் இக்காலத்தில். சிராப்பள்ளியின் பரபரப்பான பகுதியாகிய மெயின்கார்டு கேட் தாண்டி உள் செல்ல, மலைக்கோட்டை அடிவாரத்தில் மாணிக்கவிநாயகர் சன்னதி அற்புதமாக இருக்கிறது .ஒரு ஜீவ சமாதியிலிருந்து வரும் ஆற்றல் போல ,இறை அலைகள் சன்னதி முழுவதும் சூழ்ந்து தெய்வீக மனம் கமழ்கிறது.தொழில் ,பணம் ,வேலை சம்பந்தபட்ட பல பிரச்சனைகளை கோரிக்கைகளாக இங்கே வைக்கிறார்கள்.மாணிக்கவிந