ஸ்ரீ மச்சமுனி சித்தர் அய்யா - திருப்பரங்குன்றம்-II
சித்தன் அழைத்தால் தான் சித்தனை பற்றிய அருள் அலைகளை உணரமுடியும்.என்னதான் மனம் விரும்பி வலுகட்டாயமாக சென்றாலும் சித்தன் அழைக்கவில்லை எனில் சித்தரின் தரிசனம் கிடைக்காது.அதிகாலை நேரம் ஒரு கனவு. அதில் ஒரு பெரிய மரம் அதன் அருகே ஒரு மூலிகை செடி அருகே ஒரு பெரிய மலைபாறை ,அதில் அழகிய சித்தர் உருவம் படமாக மிக அழகாக வரையப்பட்டுள்ளது.சித்தரின் பெயர் தெரியவில்லை.அருகிலேயே இருக்கும் மூலிகை அற்புதமான நறுமணம் கமழ்கிறது.சட்டென எழுந்துவிட்டோம் .இன்று ஏதோ ஒரு சித்தரின் அல்லது மகானின் தரிசனம் கிடைக்க போகிறது என்பது மட்டும் தெரிந்தது. ஏதேனும் ஒரு கோவிலுக்கு செல்லலாம் என முடிவுஎடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல ஆயத்தமாகி கிட்டதட்ட ஒரு மாலை நான்கு மணிக்கு மெதுவாக மலை அடிவாரம் வந்தோம் .சரியான கூட்டம் ,ஏன் என விசாரித்த போது ,இன்று சஷ்டி ஆரம்பம் ,இன்று முதல் நாள் ஆதலால் இதோ இங்கே தெரிகிறதே சரவணபொய்கை அங்கே குளித்து முருகனை தரிசித்து காப்பு காட்டி விரதம் அனுஷ்டிப்பார்கள் என்றனர்.மெதுவாக கடந்து மேல் செல்ல ஆயத்தமானோம்.மலை எங்கும் அதிக அளவில் பாறைகள் தென்பட்