ஸ்ரீ காளிகாம்பாள் பாதம் போற்றி ..!!!
எந்த ஒரு ஸ்லோகம் ஆனாலும் சரி ,எந்த ஒரு மந்திரம் ஆனாலும் சரி,அதை அதன் இயல்போடு சொல்ல அதாவது மனம் லயித்து அதன் தன்மைகளை முழுமையாக உணர்ந்து சொல்ல ஆரம்பிக்க, அதன் அலைகள் மெல்ல மெல்ல நம்மை சூழ்ந்துகொள்ள ஆரம்பிக்கும்.உதாரணமாக கனகதாரா ஸ்தோத்ரத்தை அட்சரசுத்தமாக கணீர் கணீர் என்று, அதில் உள்ள அட்சரங்களை உச்சரிக்க (வார்த்தைகள் நுனி பிரளாமல் ,ஸ்படிகங்கள் உருண்டு ஓடுவது போல ),ஒருவித அதிர்வு அலைகளை உணர முடியும்,அந்த அலை அந்த ஸ்லோகத்தின் தன்மையை மிகஅழகாக உணர்த்திவிடும்.எப்படி நறுமணமுள்ள வஸ்துவிலிருந்து வரும் காற்று அந்த வஸ்துவின் நறுமணத்தை தருகிறதோ, அது போல ஸ்லோகங்களின் மந்திரங்களின் தன்மையை , உச்சரிக்கும் நமது பிராண அலை , மிக அழகாக அதில் பொதிந்துவைத்துள்ள அதிர்வுஅலைகளை கொண்டுவந்துவிடுகிறது.அங்கே அது ஏற்படுத்தும் தாக்கத்தை மிக எளிதில் உணரலாம். அப்படி, சாதரண நமது நிலையிலிருந்து , தற்பொழுது ஸ்லோகத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட ஒரு வித அதிர்வு அலை உணர ஆரம்பிக்க முற்படும் போதே , நாம் மேலும் ஒரு படி முன்னேறிக்கொண்டிருக்கிறோம் என்பது எளிதில் விளங்கும்.சற்றே ஆழ்ந்து மேலும் கவனிக்க,கர