மகான் நாகமணி அடிகளார் அய்யா ஜீவசமாதி - பெருங்குடி சென்னை.!!!
கருணை என்பதை நம்மில் எத்தனைபேர் அதன் முழுத்தன்மையை உணர்ந்திருக்கிறோம்.கருணை என்பதை ஒரு வார்த்தை கொண்டு அடக்க இயலுமா ?கருணை என்ற ஒரு வார்த்தை ஓர் அளவுக்கு அதன் தன்மையை அதன் ஆற்றலை உணர்த்துகிறது.ஆனால் உணர்ந்தால் தான் இந்த ஒரு வார்த்தையின் தாத்பர்யம் இவ்வளவு பெரியதா என புரிகிறது.வார்த்தைகொண்டு வர்ணிக்க இயலாதுகருணையின் ஆற்றலை. எல்லா தெய்வங்களும் கருணையின் பிறப்பிடம் ,கருணை கடல் போல் கொட்டிக்கிடக்கிறது.எல்லையற்ற கருணை உடையவர்கள் மகான்கள்.எல்லா மகான்களும் கருணையின் வடிவம்.எல்லா மகான்களிடமும் கருணை என்னும் ஆற்றல் ததும்பி வழிகிறது.கருணை என்பதை நன்கு உணர்ந்து உள் கடந்து சென்றால் தான் அதன் வீரியம் புரியும்.இதை உணர்ந்துவிட்டால் அங்கிருந்து அன்பெனும் அலைகள் சூழ்ந்துகொள்ளஆரம்பித்துவிடுகிறது. இன்னும் கொஞ்சம் இப்படியே இதன் அலைகள் பிடித்தால் அன்பின் அலைகள் தாண்டி இறைஅலைகள் சூழ்ந்துகொள்கிறது.கருணையும் அன்பும் ஒன்றை ஒன்று பிரிக்க இயலாது.கருணை உள்ளம் கொண்டவர்கள் அன்பால் அன்பின் அலைகளால் அருள் ஆசி வழங்குகிறார்கள்.எந்த எதிர்பார்ப்புமின்றி தம்மை நோக்கி வரும் அன்பருக்கெல்லாம் அன்பால் பற்பல புரிய