இறை தேடும் பயணத்தில்...!!!
மனம், இறைவன் வந்து அமரும் இடம்.என்றும் மிக உயர்ந்த நிலையில் இருத்தல் அவசியமாகிறது.அகண்ட பிரபஞ்சம் போல ,ஆழ்ந்து அகன்று விரிந்து இருந்தால் அளவிலா ஆனந்தம் சூழ்கிறது.இல்லைஎனில் மாறான விளைவுவருகிறது.அகத்தே ஆராய்ந்து ஆராய்ந்து தேவை இல்லாத குப்பைகளை எல்லாம் தூக்கி எறிய எறிய, மனம்மேலும் மேலும் உயர்வு பெறுகிறது.இறைஅலைகள் என்பது ஒரு இலவம் பஞ்சுபோல எடையற்ற ஜீவ அலைகள்,எந்த உருவமும் கிடையாது,எந்த வடிவமும் எடுக்கும் இந்த அலைகள்.இறைவன் உள்ளத்தில் அமர்ந்தால் மகிழ்ச்சி கரைபுரண்டோடுகிறது. எவர் உள்ளத்திலும் வந்து அமருவான் இறைவன்.இவன் தன்மை யாதெனில் ,இவனுக்கு எதுவும் சொந்தமில்லை ,யார் தம்மை அழைத்தாலும் பாரபட்சமின்றி வந்தமருவான் ,எத்தனை கோடி ரூபாயும் ஒன்றுதான் எங்கிருக்கும் எதுவும், எந்த ஜடமும், ஒன்றுதான். எதுவும் இவனுக்கு பெரிய விசயமில்லை,யாவரும் தம் பிள்ளைகளே,எந்த ஒரு விருப்பும் கிடையாது,வெறுப்பும் கிடையாது.இவன் வந்தால், என்னே ஒரு மகிழ்ச்சிகொள்கிறது இந்த மனம் !,இவனை பற்றி அறிய முற்படும்போதே ஒரு அமைதி சூழ்ந்துகொள்கிறது.எங்கோ மழை அடித்தால் ,இங்கே வரும் குளிர்காற்று போல ,இவன் நறுமணம் ,இவன் தன்ம