நெஞ்சமெனும் புதினம் ...!!!
எந்த அளவுக்கு உள்ளம் தூய்மையாக இருக்கிறதோ அந்த அளவுக்கு உள்ளத்தில் மனதில் தெளிவும் அமைதியும் சூழ்ந்துகொள்கிறது.எந்த அளவுக்கு தெளிவு இருக்கிறதோ அந்த அளவுக்கு வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கிறது.கர்ம வினையும் கோள்கள் ஆட்சியும்,புண்ணியத்தின் குறைபாடும் இந்த மனதினை சும்மா பந்தாடிவிடுகிறது.பெருத்த அளவில் சம்மட்டி அடி வாங்குவதும், இந்த உள்ளத்தில் தான், இந்த மனதில் தான்,அதே போல்,மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து தாண்டவம் ஆடுவதும் இந்த உள்ளத்தில் தான், இந்த மனதில் தான்.எவ்வளவு தான் தெளிவாக இருந்தாலும் ,ஒரு சில அன்றாட நிகழ்வுகள்,செயல்கள்,தம் எண்ணஅலைகள், இவை யாவும் இந்த மனதினை துவம்சம் செய்துவிடுகிறது.இங்கே வெற்றிபெற்றால் அனைத்தும் சொர்க்கமே.இல்லை எனில் எண்ண சிக்கலில் நன்கு மாட்டவைத்து பெற்ற சக்தியை இழந்துகொண்டே இருக்கவேண்டியதாகிறது. தினந்தோறும் தூய்மை என்பது மிக மிகஅவசியமாகிறது.பாத்திரத்தில் உள்ள அழுக்குகளை கழுவுவது போக, உள்ளத்தில் உள்ள குப்பையான எண்ணத்தை தினந்தோறும் வெளியேற்றுதல் என்பது அவசியமாகிறது.இதற்கு நிறைய வழிகள் உள்ளது.எது நமக்குபிடிக்கிறதோ அதனை பின்பற்றி தூய்மை செய்தல் நல்லது. ஒர