ஸ்ரீ ராமநாதீஸ்வரர் சுவாமி திருக்கோவில் போரூர்.
இறை எனும் சக்தி , இறை எனும் வெளி, இறை எனும் பேராற்றல் ,இறை எனும் பேரண்ட நாயகன் ,இறை எனும் சிவம், இறை அது தாமாகவே தம்மை தாமே அறியும் பயணத்தில், பஞ்சபூதமுதல் ஆறறிவு உள்ள மனிதன் வரை யாவும் ஒரு கட்டமே, ஒரு நிலையில்லா ஒரு நிலையே.எல்லாமே மாறுதலுக்கு உட்பட்டு ஒன்று மற்றொன்றாய் மாறி மாறி இறை தம் பயணத்தில் தொடர்ந்துகொண்டேஇருக்கிறது.இழந்த நொடிகள் மீண்டும் வருவதில்லை,இருக்கும் இந்த நொடியை மிக கவனமாக அதில் வாழ்ந்துவிடுவதே மிக சிறந்தது. இறை அது தாமே தம்மை அதிக அழுத்தத்திற்கு உட்படுத்தி ,தாமே ஒரு மிக சிறிய அணு எனும் அளவிற்கு தன்னிச்சையாக மாற்றம் பெற்று ,அதே பேராற்றல் தாம் உருவாக்கிய அணுவினை எல்லா பக்கங்களிருந்தும் அழுத்தியும் சூழ்ந்தும் அதனை சுழலவைத்தும் ,இப்படியே எண்ண இயலா கோடான கோடி அணுக்களை உருவாக்கி,அதனை அழுத்தி சுழலவைத்து, தமது அடுத்தடுத்த நிலைகளை ,வடிவங்களை பெற்று ,ஆகாயமாகவும் ,காற்றாகவும்,நெருப்பாகவும்,நீராகவும்,நிலமாகவும் உருவாக்கி ,அதிலிருந்து ஓர் அறிவு உடைய உயிர் முதல் ஆறு அறிவு உடைய மனிதன் படைத்து தமது ஒன்றுமில்லா ஒன்றிலே இருக்கும் அதி நுட்பத்தை வெளிபடுத்தி தம் பயணத்தை தொ