Posts

Showing posts from August, 2017

ஸ்ரீ ராமமுனி அய்யா !!! - மதுரை.

Image
விஷ்வரூபமாகி மகா விஷ்வரூபமாகி விரிந்து விரிந்து   எங்கும்  எங்கெங்கும் வியாபித்திருக்கும்  அகண்டாகார  பேரொளி நாயகனே !! தாங்கள் ஒருவனே என்றும் இருக்கிறீர்கள் .தாங்கள் ஒருவனே காலத்தின் நாயகன் .கண்ணயர்ந்து தூங்கியது போல கடந்து சென்ற எமது  கடந்த கால தலைவனும் தாங்களே ..!! எமது நினைவு தெரிந்த ஆரம்ப நாள் முதல் யாம் தங்களிடமே ,எமது பல் வேறு  கோரிக்கைகளையும் ,வாழ்வின் பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் அவைகளை எதிர்கொள்ள இயலாது துவன்றும், அழுதும்,வீழ்ந்தும் , விம்மியும் விழி பிதுங்கியும்  இருந்தோம் அப்போது தாங்களே எமக்கு தமது அருள் தந்து ,எம்மை தாங்கொணா துயரத்திலிருந்து  பல முறை விடுவித்தீர்கள். இன்றைய  நாள்  முடிந்தவரை நிம்மதியாக இருக்கவியல்கிறோம்,விதியால் அச்சு பிசகாமல் ,எதை எதைஎல்லாம்  எதிர்கொள்ளவேண்டுமோ அதையெல்லாம் எதிர்கொள்ளச்செய்து,  மிக அற்புதமாக  நிகழ்வை நிகழ்த்தி, இன்பம் துன்பம் பேரின்பம் அமைதி என  எம் மனதினை பல மாற்றங்களுக்கு உட்படுத்திஇருக்கீறீர்கள்.  தாங்களே இவை யாவற்றிற்கும்  காரண கர்த்தா ,தலைவன் என்பத...