Posts

Showing posts from June, 2016

சூட்சுமங்கள் நிறைந்த ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் !!!

Image
சென்னை மாடம்பாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தேனுபுரீஸ்வரர்  கோவில்  மிக பழமையான ஒரு அற்புதமான கோவில்.கபில  முனிவர் சிவனை இடது கையால் ஆராதனை செய்ததற்காக  பசுவாக (தேனுவாக) பிறந்து சிவனை வழிபட்டு  இங்கே சாபவிமோச்சனம் அடைந்ததாகவும் ,சோழப்பேரரசர் தம் கனவில்இங்குள்ள ஏரியில்  சுயம்பு லிங்கம் இருப்பதை கண்டு ,இந்த அழகிய கோவிலை கட்டியதாகவும், அருணகிரிநாதர் இத்திருத்தலத்தை "தோடுறுங் குழையாலே...." என பாடியுள்ளதாகவும் வரலாறு சொல்கிறது .இப்படி நீண்ட நெடிய வரலாறு தொடர்கிறது.வலைத்தளத்தில்  நிறைய தகவல்கள் கொட்டிக்கிடக்கிறது.படித்து பயன் பெருக .!! இங்கே எமது அனுபவத்தை மட்டுமே எழுதுகிறோம். ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் சிறிய சுயம்பு லிங்கமாய் மிக அழகாக  காட்சிதருகிறார்.கருவறை முழுவதும் நல்ல தூய வெண்மையானஆற்றல் நிறைந்த அலைகள் நிறைந்து,தம்மை வந்து வணங்குவோரின் ஆக்னாசக்கரத்தை தொட்டு உரசிச்செல்கிறது.கஜபிருஷ்ட வடிவில் உள்ள கருவறை என்கிறார்கள்.எல்லாம் சிவனின் தார்மீக அலைகள் ஆட்சிசெய்கிறது. கருவறைவிட்டு வெளியே வந்து ஸ்ரீ தேனுகாம்பாள் தாயாரை வணங்கி வெளியே வர ,ஸ்ரீ பைரவர் அற்புதமாக காட்சி தருக