தந்தை தரும் தமிழ் ஞானம் !!!
அய்யாவின் பாடல்களை ஆழ்ந்து படிக்கும் போது ,ஒரு வித அலை எங்கோ இழுத்துச்செல்கிறது .எத்தனையோ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழைமைக்கு அழைத்து செல்கிறது. அது தமிழ் கொஞ்சிவிளையாடும் காலம் .தமிழ் என்றால் இன்று நாம் பேசும் தமிழல்ல. தூய தமிழ், நுனி நாக்கு பிறழ்கிறது.அந்த தமிழை கேட்கவே ஒரு வித ஈர்ப்பு வருகிறது.இப்படி ஒரு தமிழா என்று வியக்கும் அளவிற்கு ,மிக அழகிய தமிழ் ,பசுமை தமிழ், அன்புத்தமிழ், கொஞ்சும் தமிழ், செந்தமிழ் ,மெல்லிய தமிழ்,அமுதம் சுரக்கும் தமிழ்,இனிமை கொஞ்சும் தமிழ்.ஆழ்ந்து கவனிக்க இறைஅலைகள் வார்த்தைகளாக தமிழ் மொழி மூலம் தெறித்து மொழியாக வார்த்தையாக துள்ளி உருண்டு ஓடுகிறது. அன்பும் சத்தியமும் நிறைந்த ஒரு காலம்.உண்மை மட்டும் உலகை ஆண்ட காலம்.இயற்கை நறுமணமும் ,தூய காற்றும் ,மூலிகை வளமும் நன்கு நிறைந்த செல்வ வளம் நிறைந்த ஒரு காலம். எவர் நினைக்கும் எண்ணமும் தூய அலையாக ஆங்காங்கு சுழன்று செல்லும்,அதன் தன்மை பிரித்து இது இவர் உடையது தான் என்று பிரித்து சொல்லும் அளவுக்கு சூழல் தூய்மையாக உள்ள ஒரு காலம்.எழில்கொஞ்சும் இயற்கையோடு இயற்கையாக இறைநிலைக்கு அடுத்த நிலையாய் உருவான காலம் . தமிழ் மொழியே