ஒம் நம சிவாய !!!
மனிதனின் மனோ நிலை எந்த அளவுக்கு பக்குவம் அடைகிறதோ,எந்த அளவுக்கு ஞானம் பெறுகிறதோ அந்த அளவிற்குதான் அவனை பொறுத்தவரை இந்த உலகமும் வாழ்கையும் உயர்வாக தெரியும். மனம் தான் வாழ்க்கை மனம் தான் உலகம் என்பதை மனிதன் புரிந்துகொள்ளவேண்டும் என்பது தந்தையின் வேதவாக்கு .பலகீனமான மனம் எதற்கும் ஒத்துவராது.அதை வைத்துகொண்டு எதையும் சாதிக்க இயலாது.ஆக மனம் வலுப்பெறவேண்டும்,மனதின் ஆற்றல் நன்கு தெரிந்து உணரவேண்டும்.எது வரினும் அதனை முதலில் எதிர்கொள்ளுதல், தாங்குதல் இந்த மனம்.இது ஒரு நிலையில் இல்லை எனில் எதையும் எதிர்கொள்ளல் இயலாது. இந்த' மனம் நமது உடலில் உண்டான ஜீவகாந்த ஆற்றலின் அடுத்த நிலை அடுத்த கட்டம்.இவை செலவாகிகொண்டேயிருக்கும் ,அவ்வாறு இது வரை பழக்கப்டுத்திக்கொண்டுவிட்டோம்.அது வந்தவழி திரும்பி உள்நோக்கி பார்க்க அமைதிபெற்று ஆற்றல் தம்முள் சேர்த்துக்கொள்கிறது. எந்த ஒன்று கிடைத்தால் அல்லது அதை உணர்ந்தால் இந்த மனம் அது நிம்மதி பெரும்,அமைதி பெரும்,இன்றைய காலகட்டங்களுக்கு தகுந்தார் போல நமது வாழ்வியல் நிகழ்வுகள் சீராக இயங்க ஒத்துழைப்பும் ,யாருமே தர இயலாத ஒரு தீர்வும் தரும்? பிரம்மத்தில் ம