ஸ்ரீ ஸ்யாமளா தேவி பாதம் போற்றி...!!!
ஈன்றெடுத்து அறிவு புகட்டிய உலகம் இது. இங்கே ஏதாவது கைம்மாறு செய்வதே சாலச்சிறந்தது , இங்கிருந்து தானே அனைத்தும் பெறப்பட்டது.மற்றவர்களின் உதவி ஏதேனும் ஒரு விதத்திலேனும் இல்லையேல் வாழும் வாழ்கை கடினமாகிபோய்விடுமல்லவா ?. ஆழ்ந்து அகன்ற பிரபஞ்சத்தை , சற்றே உள்நோக்கி , அதனுள் மனதை செலுத்த , கற்றதும் , பெற்றதும் , போட்டியும் , பொறாமையும் , சந்தோசமும் துக்கமும் , சுவடற்று , அறிவோ அர்த்தமற்று ஒரு சிறு புள்ளியில் முடிந்து , காணமல் போய்விடுகிறது.எத்தனை சாம்ராஜ்யத்திற்கு அதிபதியாயினும் இங்கே தூசியாகிபோய்விடுகிறதல்லவா ?. மீதம் இருப்பதோ அன்பெனும் ஒரு சிறு ஈர்ப்பு.அந்த அன்பே பிறகு ஆழ்ந்து விரிந்து இரண்டற கலந்து முழுமை எனும் தன்மை பெறுகிறது. குழந்தை கன்று ஒன்று தாயை விட்டு விலகி , கொஞ்ச தூரம் ஓடியாடி , ஆட்டம் போட்டு , தாயை காண இயலாது அறியாது , தவித்து , போராடி , பிறகு ஒருவாறு தம் தாயை அடைந்தவுடன் , அந்த குழந்தை கன்றுகுட்டி பெரும் மகிழ்ச்சி இருக்கிறதே , அப்பப்பா...! அது போல இறைவனே தம்மை அறியும் பயணத்தில், இந்த பரிணாம மாற்றத்தில்,தனித்து ஒரு சிறு உயி ராக மாற்றம் பெற்று, வெகு காலம் பிரிந்