தென்பொதிகை கைலாயம்

அன்புள்ள அகத்திய நெஞ்சங்களை ஒரு சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் .கால சக்கரம் சுழல சுழல மாற்றம் ஒன்றன் பின் ஒன்றாக அரங்கேறுகிறது .எத்தனை தலைமுறை கர்ம வினைப்பதிவுகள் அச்சு பிறழாமல் மிக அழகாக செயல்படும் விந்தை .செய்த புண்ணியம் பாவம் அனைத்தும் சூட்சும செல்களில் பதிந்து அதனதன் விளைவுகளை நடத்திக்காட்டும் அற்புதம் .எப்படி வாழ்க்கை இப்படி உள்ளது ,ஏன் இந்த உடல்,மனம் அழுத்தம் தரும் பதிவுகள் ? யார் இதனை தீர்மானிப்பது?கடந்த கால பதிவுகளுக்கு யான் என்ன செய்ய முடியும் ? எம் எண்ணம் அறிவு இவை மீறியும் வந்து ஆட்டிப் படைப்பது ஏன் ? அத்தனையையும் அனுபவிக்க வேண்டியது தான் .இறைவனின் ஆணை !இம்மி பிறழாமல் நீதி வழங்கும் ஈசனின் உத்தரவு !இனி வரும் காலங்களில் அமைதி உரு...