ஸ்ரீ ராம தேவர் சொரூப சமாதி
அன்புள்ளம் கொண்ட அகத்திய நெஞ்சங்களை நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். கால தாமதத்திற்கு வருந்துகிறேன்.ஸ்ரீ மஹா பைரவர் கட்டுரையில் வரும் பைரவ மந்திரம் சக்தி மிகுந்த நல்ல அதிர்வு அலைகளை தரக்கூடியது. சூட்சும சக்தியை பெருக்கக்கூடியது. நம் சூட்சும உடம்பிலே ஒரு polish ,இறை சக்தியால் ,பைரவ சக்தியால் மெருகேற்றப்படுகிறது. எப்பொழுதும் நம்மை தொட்டுக்கொண்டே,எங்கெங்கு சென்றாலும் நம்முடனேயே வருவது நம் சூட்சும உடல்.நல்ல அதிர்வு அலைகள் நமக்கு எப்பொழுதும் நல்ல எண்ணங்களை தரவல்லது . இந்த சூட்சும உடல் எந்த அளவுக்கு ஒருவருக்கு செறிவுள்ளதோ அந்த அளவுக்கு, மனம் நன்கு வலிமை பெரும் ,நல்ல திடம் பெறும் ,நல்ல நிறைவு பெறும்.நல்ல திடமான ,அலைபாயாத நல்ல ஆரோக்கியமான மனதில் தான்,ஒரு தீர்க்க மான முடிவு எடுக்க முடியும்.நல்ல சரியான முடிவு எடுக்க தெரிந்தவர்கள் தான் வாழ்க்கையின் உயர்நிலையில் .இன்றைய உலகத்திற்கு மிக மிக அவசியமானது,இந்த மிக சரியான முடிவு எடுத்தல் என்பது. குப்பையான எண்ணங்களை வேரறுத்து மன விரயத்தை பாதுகாக்க வல்லது பைரவ சூட்சும அதிர்வு அலைகள் .ம