இது அன்பின் ஆழம் ...!
சமீபத்தில் யாம் சதுரகிரி எனும் ஒரு புனித மலைக்கு சென்றோம் எமது நண்பர்களுடன் . இயற்கை எழில் கொஞ்சும் இந்த சதுரகிரிமலை ,தூய்மையான மூலிகை காற்று , அழகான நீரோடை ,தர்பை புல் படர்ந்த மலை ,பனி போர்த்திய மலை ,என்றுமே கட்டி தழுவி முத்தமிடும் மேகம்,ஓங்கி உயர்ந்த மரங்கள், இயற்கையின் மூலிகைகள் , என பல்வேறு இயற்கை அதிசயங்களால் நிறைந்துள்ளது . மலையின் அடியிலிருந்து உச்சி செல்ல கிட்டதட்ட நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஆகும். சித்தர்களை யாரையாவது பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணமே எனக்கு மேலோங்கி இருந்தது. உடல் சோர்வு , பசி , தாகம் என பல உபாதைகள் . மலையின் அழகை யும் ,சில் வண்டுகளின் ரீங்காரம் ,நிழல்தரும் மரங்களின் அழகையும் ரசித்தவாறே சென்றோம் . மனம் எண்ணிய சித்தர் யாரும் கண்ணில் தென்படவில்லை . பல மணி நேர பயனதிருக்கு பிறகு மலை உச்சி அடைந்தோம் ... சுந்தர மகாலிங்கம் சன்னதி சென்று வணங்கினோம் .. ஒரே மகிழ்ச்சி ..!! சுந்தர மகாலிங்கம் சன்னதி என்றுமே மனதுக்கு நிம்மதி ..! ஆனால் எனக்கு ஒரே ஆதங்கம் சுவாமியிடம் .. மகாலிங்கமே