Posts

ஷக்தி ஸ்வரூபிணி ..!!!

Image
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே                                                                                      -     அபிராமி அந்தாதி  அழகெல்லாம் ஒருசேர  பூத்தவளே !! ஆயிரம் கோடி சூரிய ஜோதி பிரகாசம் உடையவளே !!  பிறவாமுக்தியளிக்கும் பிரபஞ்சநாயகனை  பின்னிய கொடிபோல சூழ்ந்தவளே   ..!! ஸர்வமங்களம் நிறைந்தவளே ..!! ஸாந்தஸ்வரூபியே ..!! அன்றுபூத்த மலர்போல என்றென்றும் உற்சாகம் கொண்டவளே ..!! ஒளிபிழம்பாம் ஓராயிரம் கோடி கோடி சூரியனின்தகதகவெனும் ஆற்றல் பெற்று  என்றென்றும் சிவத்திலிருந்து ஒளிர்பவளே ..!! சிவத்தின் சாராம்சமே ..!! சிவத்தின் இயக்ககலமே ..!! சிந்தையெல்லாம் சிவத்திடம் வைத்தவளே..!...

யாமெனும் இறை II !!

Image
ஆழ்ந்து  ஆழ்ந்து எம்முள்ளே எம்  உள்ளத்துள்ளே  நீண்ட  நெடிய  பயணம்  ஒன்றை  மேற்கொண்டு  பயணிக்கின்றோம்  ,பிரம்மமாய்  ஆதியாய்  ஜோதியாய்  இருக்கும்  நின்  அற்புத  தரிசனம்  காண  வியல்கின்றோம்  இறைவா .நிமிடங்களும்,நாட்களும் ,வருடங்களும்  கடந்து  ஓடுகிறது .இப்பிறவியே  சென்றாலும்  மீண்டும்  மீண்டும்  தொடருவேன் எம்  பயணத்தினை ..நினை  காண நின் தரிசனம்  பெற  நின் திருவடி  ஒன்றே  கதி  எமக்கு  .நின்  சிறு பிம்பம்  யாம்    இதை  உன்னில்  கலக்க  யாம்   இருப்பதை பரிபூரணமாக  உணருகின்றோம் எம்பெருமானே  !! தூய ஒளியே !! மாபெரும்  சர்வ வல்லமை  கொண்டோனே  !! அணு முதல்  பேரண்டம்  வரை  ஊடுருவி  இமைப்பொழுதில்  எல்லாம்  ஒன்றாய்  அறியும்  திறன் கொண்ட  திவ்ய  பிரம்மஸ்வரூபமே .!!! நின் கருணை  இல்லா   உயிர...

யாம் எனும் இறை ..!!!

Image
எம்முள்ளே  எங்கும் நிறைந்த  பரம்பொருள்  இறை எனும் அற்புதம் தம் பயணத்தினை தொடர்கிறது.ஒரு மிக பெரிய அற்புதமான எங்குமே நிறைந்த பரம் பொருள்,  சர்வ வல்லமை நிறைந்த ஆற்றல் அது எம்மோடு ஏற்படுத்திய ஒரு  பிணைப்பு,அதனால்  எம் உள்ளத்தில்  ஏற்படுத்திய தாக்கம் அதன் விளைவாக கிடைத்த ஒரு மிகப்பெரும் நம்பிக்கை  இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி மிக அழகாக பயணிக்கவைக்கிறது . எம் தந்தை போல் எமக்கு பின்னால் இருந்துகொண்டு இயக்குவதால் இந்த உயிர் துள்ளிக்குதிக்கின்றது.எங்கும் எங்கெங்கும் வியாபித்து அற்புதமாய் செயல் ஆற்றுகிறது .எவன் ஒருவனுக்கு உயிர் பற்றிய ஞானம் .உயிர் பற்றிய ஒரு தெளிவு இருக்கிறதோ,உயிர்  பற்றிய ஒரு பரந்த அனுபவம் இருக்கிறதோ  அவனுக்கு மரண பயம்  என்றுமே ஏற்படுவதில்லை.மன அழுத்தம் வீண் குழப்பம் எல்லாம் இந்த  பாழாய்போன மனம் வழி, இந்திரியங்கள் வழி செல்வதாலே,கூனி குறுகிய நான் எனும்  அகந்தை , எனது  உடம்பு மட்டுமே ,அழகான இந்த கண்கள் கைகள் எனும் ஸ்தூலம்  மட்டுமே ,யாம் செய்யும் செயல்கள் எல்லாம் என்னாலேயே செய்யப்பட்டன ,என்னாலே இவ்வளவ...

ஸ்ரீ லலிதை

Image
ஆடாது அசையாது ஆழ்ந்து உள்நோக்கி பரந்து விரிந்த ஸ்ருஷ்டியில் தாம் படைத்த உயிர்களின் ஒவ்வொன்றையும் சூழ்ந்து ,அரவணைத்து ,ஒவ்வொரு அணுவிலும் ஊடுருவி அருள் ஆட்சி செய்யும் ஆயிரம்  கோடி சூரியனை போன்ற கண் கூசும் பிரகாச  சுடரொளி கொண்ட  கருணை தாயே  !!  கருணா ஸாகரமே !!  அன்பால் இளகிய நெஞ்சம் கொண்டு ஈசனையே ஈர்த்த மாபெரும் பேரழகியே ..!!அன்னம் போன்ற நடை கொண்டவளே !! அமுதம் போன்ற சொற்கள் அருள்பவளே !!  அன்னபூரணியே  ..!!  அகிலாண்டகோடி ஈஸ்வரியே !! காரிருள் நாயகனின் நெஞ்சம் ஈர்த்தவளே !!  செக்கச்சிவந்த செந்நிறம் கொண்டவளே !!  எழிலே !! நாயகியே !!துடிப்பும் துள்ளலும் கொண்ட ஈர்ப்பு நிறைந்தவளே !!   அழகே !!  ஆருயிரே !! தாய்மை நிறைந்தவளே !!   எழில் நாயகியே !! எம் நெஞ்சமெல்லாம் நின்னை நினைந்து நினைந்து ,ஏங்கி ஏங்கி ,கண்ணீர் மல்கி மல்கி ,விம்மி விம்மி , பூரித்து புளங்காகிதமடைந்து,அன்பால் கசிந்து உள்ளம் நெக்குருகி,நின் கருணை மழையில் நனைகிறது .என்றும் நின் ஜீவ அருள் ஆசி தொடர  நின்னை அழைக்கின்றோம்  தாயே ..!! வருக !! வருக...

உள்ளம் உருகட்டும் ...!!!

Image
எல்லையில்லா பெருங்கருணையுடைய பெரியோனே ..!! தூய பரப்பிரம்மமே ..!! மாசற்ற ஒளியே ..!! எண்ணத்தால் உள்ளத்தால்  உருகி உருகி  நின்னை, நின் அருள்தாண்டவ அலைகளை உணர வியல்கிறோம்,விளைவாக  உள்ளம் மாபெரும் நினது பேரன்பு அலைகளால் கசிந்து தெள்ளிய நீருற்று போல அருள்அலைகளை சுரக்கின்றது,கண்கள் குளமாகி கருணை அலைகளாக வழிந்தோடுகிறது,நெற்றியில் நினது அருள் ஜூவாலை சுடர்விட்டு பிரகாசம் கொள்கிறது. ஒவ்வொரு உயிருள்ளும் நீ அருள்சுடராய் இருக்கும் அற்புதம் அருள் ஒளியாய் வீசுகிறது என்பதை உணரமுடிகிறது. உள்ளம் உருகினால் மட்டுமே நீ அகப்படுகிறாய்.... மாசற்ற தூய அன்பாய் ..அன்பின் அலைகளாய் வெளிவருகிறாய் நின்னை வேறு எதுவும் கொண்டு உணர இயலாது, அடைய இயலாது அய்யனே ..!! ஈசனே !! மாபெரும்  இறைவா ...நெஞ்சம் நிறைந்தோனே ..!! .கேட்பாரற்று சோ....வென பரந்து,விரிந்து கிடக்கும் பிரபஞ்சவெளி நாயகனே ..!! பேறாற்றல் பெருங்கருணையுடையோனே ..!! நின்னை ஆழ்ந்து  ஆழ்ந்து நினைந்து,நினைந்து, உள்ளம் உருகி உருகி , உணர உணர ... உள்ளத்தில் சூழ்ந்த  இருள் விலகி ,உள்ளம் முன்னைவிட இன்னும் அதீத நம்பிக்கை பெற்று,நின் அருள் ...

இருளும் ஒளியும் !!

Image
எமைஆளும்  ஈசனே !! சர்வேஸ்வரனே !! ஆதி மூலமே !!  ஒளியாய் பேரொளியாய் எங்கும் எங்கெங்கும் நிறைந்திருக்கும் சுத்த பரப்பிரம்மமே !!மகாதேவனே !!நினதருளால் காலசக்கரம் சுழல்கிறது .யுகங்கள் ஆயிரம் ஆயிரம் பிறழ்கிறது ...எத்தனை எத்தனை கோடி கோடி ஜீவராசிகள் அதன் குணாதிசயங்கள் அழகு,  திறமை, மதி நுட்பம் ..அப்பப்பா..... யுகம் யுகமாய் ஆயிரம் ஆயிரம் ,கோடி கோடி, அண்ட பேரண்ட ஜீவராசிகளை பிறப்பெடுக்கவைத்து காத்து  அமுதுபடைத்து ,அரவணைக்கும் , சிந்திக்க ,கணிக்க, இயலாத எண்ணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட பேரொளியே !!  என்னவென்று சொல்வேன் நின் மாபெரும் தன்மையினை !! எப்படி உரைப்பேன் நின் கருணை அலைகள் எம்முள் அலையாய் ஏற்படுத்திய தாக்கங்களை !! கண்டு வியந்தேன் பலமுறை எம்முள்ளும் காட்சியாய் எம் நெற்றியுள் புருவ மத்தியுள் ஒளியாய், என்றும் சுடரொளிபோல ,அமைதியாய் ஆடாது அசையாது இதமான  பௌர்ணமி நிலவைப்போல  ஒவ்வொரு மனித உயிருள்ளும் நெற்றியில் நெற்றிகண்ணில் ஒளியாய் சுடர்விடும் வற்றா பேரொளியே ! ..எங்கள் நாயகனே !! பேரின்ப ஒளியே !! ஆற்றலே !! சத்குருவே !! சுத்த பரப்பிரம்மமே !! என்றும் நின் ...

இறை ஜோதி

Image
ஆழ்ந்தும் அமர்ந்தும்  நீண்டும் விரிந்தும் கூர்ந்தும் குறுகியும் எங்கும் எங்கெங்கும் வெளியாய் பேரொளியாய் இருக்கும் எல்லாம் வல்ல எம்பெருமானே ! மிகபெரும் பெருவெளியே !! ஓர் நீண்ட நெடிய மூச்சில் விரிந்து நினை அன்பால் கட்டியணைக்க வியல்கிறேன்  ,வீழ்கிறேன் ..பின்பு மீண்டும் எழுகிறேன் ...எம் முயற்சி தொடர்ந்துகொண்டேயிருக்கிறது ..என்றோ நின் பொற்பாதத்தை அடையும் முயற்சியை தொடர்ந்தவண்ணம் இருக்கிறேன். ஆற்றலாய் அலையாய் ஒளியாய் இருக்கும் அருட்பெரும் ஜோதியே !! வெட்ட வெளி ஜோதியே ! ஜோதியில் ஜோதியே ! எம் தந்தையாகிய சத்குருவே ! பரப்பிரம்மமே ! சுத்த பேரொளி சூழ்ந்து  ஒளியாய் ஜொலிக்கும் ஆனந்த பேரின்பமே ! நின் பிரகாசமூட்டும் அற்புத ஒளியை நாள்தோறும் காண எம் செயல்களையும் ,கர்மவினைதாக்கங்களையும் சரிசெய்து, என்றும் நின் அருள் தாண்டவமாடும் அலைகளை எம்முள் உணர  ,வழிவகுப்பாய் ..பேரொளியே ..!! பெரும் பெரும் வற்றாத கருணைஉடைய பேரொளிப்பெருமானே !!!  நின் திருவடியில் என்றும் என்றென்றும் சரணாகதி !! புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் ப...