Posts

இறைபிம்பம் மனம்

Image
தூயோனே !!  துவண்டமனதுள் துளிர் விடும் மாயோனே !! மாசற்ற  மறையோனே !! எம் பெருமானே!! வேயோனே!!  வெட்ட வெளி பெரியோனே!! சேயோனே!!  சிரம்தாழ்கிறேன் நின்திருவடியில். ஒரே பிரம்மம் ,ஒரே வெளி, ஒரே ஒளிவெள்ளம், ஒரே பேரமைதி, எல்லாம் ஒன்றே.ஆயிரம்கோடி அண்டமிருந்தாலும் ஆளுவது  ஒரே இறை.ஒன்றாய் இருக்கும் இறையே. அழுக்காய் அகந்தையாய் யாம் ,பெருவெளியாய் பேரமைதியாய் இறை, அகந்தையை இறையில்  கரைக்க (கர்மாவால் பெற்ற அனுபவத்தை, ஒன்றிற்கும் ஆகாத கற்றறிந்த குப்பையை கரைக்க),ஒளியாய் அலையாய் இறையாய் மிளிர்கிறது மனமென்னும் மாயோனின் இந்த பொய்க்களம் .இறை அமர்ந்தலால்  இதமான அமைதி அலையாய் சூழ்கிறது ,மாசற்ற ஒளியே விரிகிறது ,விரிந்து விரிந்து எங்கெங்கும் வெளியில் கரைகிறது. இலவம் பஞ்சுபோல மனம் எடையற்று போகிறது .யாவற்றையும் ஈர்த்து அரவணைக்கும் நாயகன் இருப்பால் சர்வ வல்லமையும் பெற்றது போல யாவற்றையும் ஈர்க்கிறது .யாவற்றுள்ளும் சூழ்ந்திருக்கும் உணர்வும் பெறுகிறது .இறைக்கு, பேரண்டநாயகனுக்கு என்ன தேவை இங்கே ?! பணமா... ?பாசமா...? பந்தமா ...? எதுவும்இல்லையே எல்லாமே இறையே.ஒன்ற...

சித்தனின் ஆசியில் ஒரு துளி ..!!!

Image
கருநீல வண்ணனோ காரிருள் கண்ணனோ பெருஒளி பெருக்கிடும் பேரண்ட நாயகனோ கரும்கும்மிருட்டு சூழ்ந்தீர்த் தணைக்கும் பெருவெளி பிரம்மாண்ட நாயகனே ..!!  என்றும் நின் புகழ் ஓங்குக ! வேதமோ  வேதத்தின் சாரமோ யாமறியோம் நாதமோ நாதத்தின் மூலமோ  யாமறியோம் பாதமோ பனிமலர்  சூழ்ந்திடும் மேரோ  யாமறியோம் அன்பெனும் தேகத்தில்  கசிந்த தெள்ளியநீரே! எம் பெம்மானே!!   என்றும் நின் புகழ் ஓங்குக ! அலையாய் ஆதியாய் ஜோதியாய் வெளியாய் கலையாய் காருண்ய வேதமாய் என்றும் நிலையாய்   பெரும் அருள்ஒளிநிறைந்த  பால்வெளி அலையாய் இருக்கும் பெம்மானே !! என்றும் நின் புகழ் ஓங்குக ! மெல்லிய அலையினும் மெல்லியது நின் திருவருள் வல்லிய அலையினும் வல்லியது நின்பேராற்றல் வல்லிய ஆணவம் நீக்க  சட்டென நின்திருவருள் மெல்லிய தாண்டவமாடிடும்  பெம்மானே !! என்றும் நின் புகழ் ஓங்குக! சித்தனின் அருள் பெறுவதெல்லாம் மிக சாதாரண விஷயம்இல்லை.சித்தர்களின் மார்க்கமே மிக கடினமானது தானே.வெகு எளிதில் யாருக்கும் எட்டாது . புலப்படாது.மீன் வடிவில் இருக்கும் மச்சமுனி ச...

ஸ்ரீ ஹனுமான் பாதம் போற்றி !!!

Image
 தூரம் ....தூரம்...தூரம் என எங்கோ செல்கிறது ..சென்றுகொண்டேயிருக்கிறது... மனதால், கற்பனையால், சிந்தனையால் , வேகம் ...வேகம் ...வேகம் என எவ்வளவு வேகமாக சென்றாலும் ,காலம்... காலம் ...காலம் என பிறவிகள் கடந்துகொண்டேயிருக்கிறது.சிற்றறிவிற்கெல்லாம் எட்டாத சகலமும் அறிந்த பெயரிடமுடியா பேரண்ட பிரபஞ்ச பெருவெளியே ..!! வற்றா ஆற்றலே !!அண்டகோடி  சூரியகுடும்பங்களையும் நொடிபொழுதில் இயக்கும் சர்வவல்லமை நிறைந்தோனே ..!! ஆயிரம் ஆயிரம் கோடி கோடி ஆண்டுகள் சென்றாலும் நின் அற்புத இந்த  பிரபஞ்ச திருத்தாண்டவம், படைத்து,காத்து ,அழிக்கும் இரகசிய வித்தை ,அறிந்தவர் யாருளர் ஐயனே !! அற்ப குறுகிய வாழ்க்கை பயணத்தில் ,நின்னை நின் பெருமையினை ,நினது ஆற்றலை எப்படிஇருக்கும் என்று எண்ணுவதற்குள் வாழ்க்கை சட்டென முடிந்துவிடுகிறது.எங்கோ செல்கிறது..நாட்களும் நிமிடங்களும் கரைந்து ஓடுகிறது..ஒரு இடைப்பட்ட காலம் தானே இது !! ..பெருமானே !! நீ இட்ட பிச்சைதானே இந்த வாழ்வு !! . எம் உள்ளத்துள்... ஆழ்ந்து... ஆழ்ந்து அமிழ்ந்து ...அமிழ்ந்து..எமது ஆணவம் மாயை கன்மம் விலக்கி விலக்கி செல்கிறோம்..அணுவில் ஒரு நுனியில் நின் ...

குருவைத்தேடி...!!!

Image
எல்லாம் வல்ல பரம் பொருளே !! ஆதி முதல் குருவே..!! கேட்பாரற்று சோவென கிடக்கும் பரவெளியே ..!! எல்லையே இல்லாமல் விரிந்துகொண்டேயிருக்கும் நுண்ணிய அணுக்கள் நிறைந்த  ஆற்றல் உடையோனே!! ஆதியாய் ஜோதியாய் அலையாய் எம்முள் வந்து ,எம் மனதுள் நின்று , எம் உயிருள் நுழைந்து,அழகாய் அற்புதமாய் வந்து, நின்திருத்தாண்டவத்தை நிகழ்த்துவாய் எம் நாயகனே ..!! எம் உள்ளத்துள் நின் அலைகள் இருக்கும் ஒவ்வொரு நொடியும் எமக்கு பேரின்பமே .!! நின் அருள் அலைகள் தரும் ஒரு இதம், ஒரு சுகம்,யாருமே எமக்கு இப்பிரபஞ்சத்தில் தரஇயலாது எம் பெம்மானே !! நின்  அருள் அலைகளால் தெறித்து ஓடுகிறது எம்மை சூழ்ந்த அஞ்ஞானம் ,நின்  அருள் அலைகளால் புறமுதுகிட்டு ஓடுகிறது எம்மை ஆட்டிபடைத்த கர்மவினைகள் ..!!  நின்னை எம்முள் எம் உள்ளத்துள் கொண்டுவர எதுவும் தேவையில்லை ,எங்கு அழைத்தாலும் வருகிறாய் எங்கெங்கும் இருக்கிறாய்.எங்கெல்லாம் வெளிஇருக்கிறதோ அங்கெல்லாம் நின் அருளும் இருக்கிறது.நின்னை நினைத்த மாத்திரத்தில் ஜிவ்வென பற்றிக்கொள்கிறது எம் உள்ளம் ,உள்ளத்தில் அமுதமழை பொழிகிறது ,ஆனந்தம் நிறைகிறது அமைதி பேரமைதி என அது தாமாய் மிளி...

வேல் விழி நங்கையாள் ..!!!

Image
சர்வ மங்கலம் நிறைந்தவளே !! அழகு வெள்ளமே ..!! அழகின் அழகே ..!! ஜுவாலைத் தீபோன்ற கண்கள் கொண்டு அஞ்ஞான இருளை அகற்றுபவளே!!   கருணையின் பிறப்பிடமே ...!! தேவியே ..!! ஈசனின் நாயகியே !! நின் பார்வை படுமிடமெல்லாம்  என்றென்றும் சுபிக்ஷம் தருபவளே ..!! சுத்த தங்கம் போன்று ஜொலிக்கும் சொர்ணாம்பிகையே ..!!  தாயன்பு எனும் கருணை அலைகள் கொண்டு ஆயிரம் ஆயிரம் கோடி ஜீவராசிகளையும் இயக்கி , காத்து ,அரவணைத்து ,யாவற்றிகும் அமுதுபடைக்கும்  சர்வ வல்லமை பெற்றவளே !! நின் அருள் அலைகள் ஒளி வீசட்டும் என்றென்றும் !! வில்லினை போன்ற புருவங்களை உடையவளே !! வேல் விழியை போன்ற கண்களை உடையவளே !! மஹா மஹா சக்தி நிறைந்தவளே !! அழகிய புல்லாக்கும் மூக்குத்தியும் அணிந்தவளே !! கருணா ஸாகரமே !!நின் பெருமையும் புகழும்   புராணங்கள் கூறுகிறது அவை யாவும் அளவிடற்கரியது !! நின் பாசம் நிறைந்த அருள் ஒளி பார்வையே கோடான கோடி ஜீவன்களை ஈர்க்கிறது !! ஈர்த்து அமுதமேனும் பாசமழையால்  திக்குமுக்காடசெய்கிறது !! ஜொலிக்கும் பொன்னொளி நிரம்பிய தேகமும் ,நின் நிமிர்ந்த நேர்கொண்ட பார்வையும் ,தாயன்பு நிறைந்த கரு...

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க..!!!

Image
சிவத்தை தவிர வேறு ஒருவர் இல்லை .சிவத்தை விட வேறு ஒரு வழியும் இல்லை .சிவமே கதி .சிவமே சரியான தீர்வு சொல்லும் ,சிவமே யாவற்றையும் தம்முள்ளே உள்ளடக்கி இருக்கிறது.சிவம் தரும் சோதனையை அனுபவித்து தான் ஆகவேண்டும் .முட்டி மோதி பார்த்தாலும் எங்கெங்கு சென்றாலும் சரணாகதி இங்கு தான் ,இந்த சிவத்தில் தான் கிடக்கிறது.வேண்டுபவன யாவும் தருவான் சிவன் ,சிவன்  பெருமை எண்ணி எண்ணி , சிவன் தாள் சிந்தை பணிய ,அவன் பாதம் பணிந்து சரணாகதி யடைய  சிவமே ஆற்றலாய் அலையாய் மாறி  தீர்வாய் வருவான் ,இன்னல் நீக்கி இன்பம் தருவான் சிவன் .!!! சிவமே எங்கும் .சிவமே எங்கெங்கும் .!!! ஆழமாய் அகலமாய்  வெற்றிடமாய்  விரிந்து விரிந்து சென்றுகொண்டேயிருக்கும்  அடி நுனி காண இயலா தன்மை நிறைந்தோனே !! நின் திருவடிகள் வெல்க !!மெல்லியதாய் மிக மெல்லியதாய் அனுவிலுள்ளும்  மிக பிரம்மாண்டஆற்றல் கொண்ட மிக நுண்ணியனே !!தூயோனே !! நின் பெருமை என்றென்றும் வாழ்க !! வேந்தனே !! வேதமே !! வேதத்தின் சாரமே !! எம் நாயகனே !! எம் பெருமானே !! எமை ஆட்கொண்ட பெருமானே !!  என்றும் நீயே அறிவில் தெளிவில் முதன்மையாய் இருக்கிறா...

குரு தேடல்...!!!

Image
"...சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே...." இறையை பற்றி சிந்திக்க வேண்டும் ,ஒரு துளி அலையாவது உணரவேண்டும் என்ற உன்னதமான சிந்தனை ,எண்ணம் கொண்டோர், இந்த பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு ,அது திருவண்ணாமலையோ அல்லது வேறு எங்கோ ,எங்கோ இறை கொடுத்த ஒரு சிறு இடத்தில் ,அமர்ந்துகொண்டு , மாணிக்கவாசக பெருமானார் இறை உணர்ந்து எழுதிய  ".. மாசற்ற சோதி மலர்ந்த மலர் சுடரே ...   என தொடங்கும் பாடலில் வரும்   வரியான " சோதியனே துன்னிருளே.... " இந்த இரண்டு வரியை மட்டும் ,கொஞ்சம் ஆழ்ந்து கண்களை மூடிக்கொண்டு இதன் பொருளை ,இதன் தன்மையை உணரமுற்படுங்கள் ,உங்களை வெகு விரைவில் இறை அலைகள் சூழ்ந்து ,முற்றிலும் வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச்செல்லும். இந்த பிரபஞ்சமே வியக்கும் அளவுக்கு மாபெரும் அக்னிபிழம்பாய் ஜொலிஜொலிக்கும் மாபெரும் ஜோதிமயமானவே..!!! ஜோதி என்றால் எங்கும் எங்கெங்கும் நிறைந்து ,கண் கூசும் மிக பிரகாசமாக நிறைந்து தெறித்து ,பார்க்கும் வெளியெலாம் ஒரே ஜோதிமயமாய் தகதகவென ஒளிர்கிறது.அத்தகைய ...