Posts

குரு தேடல்...!!!

Image
"...சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே...." இறையை பற்றி சிந்திக்க வேண்டும் ,ஒரு துளி அலையாவது உணரவேண்டும் என்ற உன்னதமான சிந்தனை ,எண்ணம் கொண்டோர், இந்த பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு ,அது திருவண்ணாமலையோ அல்லது வேறு எங்கோ ,எங்கோ இறை கொடுத்த ஒரு சிறு இடத்தில் ,அமர்ந்துகொண்டு , மாணிக்கவாசக பெருமானார் இறை உணர்ந்து எழுதிய  ".. மாசற்ற சோதி மலர்ந்த மலர் சுடரே ...   என தொடங்கும் பாடலில் வரும்   வரியான " சோதியனே துன்னிருளே.... " இந்த இரண்டு வரியை மட்டும் ,கொஞ்சம் ஆழ்ந்து கண்களை மூடிக்கொண்டு இதன் பொருளை ,இதன் தன்மையை உணரமுற்படுங்கள் ,உங்களை வெகு விரைவில் இறை அலைகள் சூழ்ந்து ,முற்றிலும் வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச்செல்லும். இந்த பிரபஞ்சமே வியக்கும் அளவுக்கு மாபெரும் அக்னிபிழம்பாய் ஜொலிஜொலிக்கும் மாபெரும் ஜோதிமயமானவே..!!! ஜோதி என்றால் எங்கும் எங்கெங்கும் நிறைந்து ,கண் கூசும் மிக பிரகாசமாக நிறைந்து தெறித்து ,பார்க்கும் வெளியெலாம் ஒரே ஜோதிமயமாய் தகதகவென ஒளிர்கிறது.அத்தகைய ...

இறை ஆசிகள் ...!!!

Image
சர்வேஸ்வரனே .....!!! மானுடம் அறிய இயலா அதிநுட்பதிறம் படைத்தோனே ..!!!நீ தானே என்னுள்   ....உன்னுள்ளும் நான் இருக்கிறேனே .. இந்த உண்மை அறிந்தும் மறந்து விடுகிறேனே பலமுறை .. பாசம் நிறைந்த பரந்தவெளி பெரியோனே ..!!எம் பெருமானே !!  அண்டசராசர உயிர்கள் யாவற்றையும் அரவணைக்கும் ஆதி முதல்வோனே ..!!! தூயோனே !! மாசற்றவனே ..!! மிகபெருமைகொண்ட பழைமைவாய்ந்தவனே ..!! இன்று கிடைக்கும் தொழில்நுட்பதிறமெல்லாம் உன்னுள்ளே எத்தனையோ கோடி கோடி ஆண்டுகளுக்கு முன் ,நின் அதி நுட்ப திறத்தால் ஒரு சிறு புள்ளியாக அலையாக பதிந்துவைத்திருக்கும் அதி உன்னத திறமை வாய்ந்தவனே ..!! பழைமைக்கும் பழைமையானவனே !! புதுமைக்கும் புதுமையானவனே ..!! நின் பெருமையினை அளவிடல் அரிது.நின் பெருமை எண்ணி எண்ணி நெஞ்சம் நெக்குருகி விழிபிதிங்கி நின்றோம் பல முறை .நின்னை நினைத்தல் என்பதே ஒரு சுகம்.ஆழ்ந்து ஆழ்ந்து ,அகன்று அகன்று, விரிந்து விரிந்து, பரந்து பரந்து, இயங்கும் நின் அற்புத திருத்தாண்டவம் எங்கனம் உரைப்பது எம்பெருமானே ..!!!.கிடைத்தற்கரிய  இந்த மானுட பிறவியில் நின் பெருமை எண்ணி எண்ணி ,நீ எம்மை படைத்த விதம் எண்ணி எண்ணி ,மக...

தாய் சக்தி - II

Image
பிரபஞ்சம் மிக அழகானது.தாம் படைத்த கோடான கோடி உயிர்களை காத்து அரவணைத்து அருள் ஆசி செய்கிறது தாயெனும் மாபெரும் சக்தி .நாம் வாழும் இந்த சூரியகுடும்பம் போல் ஆயிரம் ஆயிரம் சூரிய குடும்பங்களையும் ,அதில் வாழும் உயிர்களையும் மற்றும் தாம் படைத்த  கோடான கோடி ஜீவராசிகளையும் காத்து அரவணைத்து ,அன்பும் கருணையும் நிரப்பி அருள் ஆசி செய்து  ஆட்சிசெய்கிறாள் அன்னையவள்.ஒவ்வொரு உயிரும் அற்புதமானது.ஒவ்வொன்றும் ஒரு தனித்தன்மை நிறைந்தது .ஒவ்வொரு உயிரும் ஆழ்ந்து விரிந்து படர்ந்து அதன் திறமையை இந்த பிரபஞ்சஎல்லை வரை விரிக்கும் அளவிற்கு வெளியும் ஆற்றலும் நிறைந்து படைக்கப்பட்டிருக்கிறது இந்த பிரபஞ்சம் . பிரம்மாண்டமாய் மிக பிரம்மண்டமாய் விரிந்துகொண்டேயிருக்கிறது இறை.இங்கே யாருக்கும் பாதகம் நிகழாதமுறையில் செய்யப்படும் ஒவ்வொரு செயலின் விளைவும் மிக நேர்த்தியானது அதில் தோல்விகள் வெற்றிகள் என்பதெல்லாம் ஒன்றும் இல்லை.இங்கே எல்லாம் ஒன்றுதான் எந்த போட்டியும் இல்லை.பொறாமையும் இல்லை.ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு ஜடமும் அதன் இயல்பில் ,அது என்னகாரணத்திற்காக படைக்கப்பட்டதோ அதை நிறைவேற்றி , இயல்போடு ஒவ்வொரு ந...

அதிர்வு அலைகள்

Image
வெறும் வெளி இது எல்லாவற்றுள்ளும் இருக்கிறது.இது இல்லாத இடமே இல்லை.இதனுள் கோடான கோடி இரகசியங்கள் புதைந்துகிடக்கிறது.எங்கெங்கும் விரிந்தும் பரந்தும் ,அடர்ந்தும் ஆழ்ந்தும் கிடக்கிறது இந்த வெறும் வெளி எனும் வெட்டவெளி.ஆழ்ந்து நோக்கி உணர்ந்தவர்க்கே இது  ஒரு அன்பின் பெட்டகமாய் மாறி அன்பால் மிளிர்கிறது.அன்பின் ஆற்றலை டன் கணக்கில் சேமித்து வைத்திருக்கிறது,இந்த ஒன்றுமில்லா ஒன்றில் ,வெற்றிடமாகிய வெட்டவெளியில் இருக்கும் தன்மையை,இறைத்தன்மையை உணர உணர உடல் உயிர் மனம் என யாவையும் ஒன்றுபடுத்தி ஒரு பிடிப்பினை ஏற்படுத்தி ,உயிரின் அடர்த்தியை அதிகபடுத்தி எல்லையில்லா பேரின்பத்தில் ஆழ்த்துகிறது. எவ்வளவு தான் ஆரோக்கியமாக இருந்தாலும்  நம்மில் பலரை மனமே ஆள்கிறது.மனம் அதன் வழியே செல்லச்செல்ல இருக்கும் ஆற்றல் விரயமாகிறது.ஆனால் அதன் மூலம் என்ன என்று உள்நோக்க அது முதலில் விரயத்தை நிறுத்தி,பிறகு முன்னிலும் வலுபெற்று கொஞ்சம் கொஞ்சமாக ஆற்றலை நிரப்பிக்கொள்கிறது.மனதின் மூலம் என்ன என்றால் உயிர் ,அதன் மூலம் என்ன என்றால் இறை , என்று ஒரு வரியில் எளிதாக சொல்லிவிடலாம்.ஆனால் இதை உணர்தல் என்பதில் தான் ஒருவரின்...

உள்ளம் ...உணர்வாய்... இறை

Image
எம்முள் கலந்த சிவமே ..!! நின்னையே அனுதினமும் எண்ணி எண்ணி மகிழ்கிறோம் .ஒவ்வொரு நொடியிலும் தெறித்து ஓடும் நின் அன்பெனும் ஈர்ப்பு நிறைந்த அலைகளை  பிடிக்க முயல்கிறோம்  ..இயலவில்லை பலமுறை ...விடை தெரியா கேள்கிகளுக்கெல்லாம் விடை தரும் வேதாந்த சக்தியே .. அன்பெனும்  அலைகளால் அகிலத்தையே ஈர்த்து அரவணைக்கும் ஆதி மூலமே ..!! பிரபஞ்ச பேராற்றல் நாயகனே.!!!  பேரண்டம் முழுவதும்  நினது அருள் தானே ஆட்சிசெய்கிறது .. ஆனந்தக் கூத்தனே.. அன்பின் நாயகனே..!! அன்பாய் உருமாறியவனே ..!!! என்றுமே வற்றாத  கருணை நிறைந்தவனே..!!! எம் நாயகனே ..!!! எம்பெருமானே.!!  நினையே நினைந்து ..நினையே புகழ்ந்து ...நின் திருவடியில் வீழ்ந்து நின்   திருவடி பணிகின்றோம்..நின் கருணையை என்றென்றும் எமக்கு அருள்செய்வீர்களாக..!!! தாவிக்கொண்டே இருக்கும் மனதிற்கு அதை அறிய முற்பட அடங்கும்.இல்லை எனில் ஒரு  இடத்தில் நிலை கொள்ளாது . எப்படி நமது உடலுக்கு பசி என்ற ஒரு உணர்வு வருகின்ற பொழுது தேவையான உணவுகளை கொடுக்கிறோமோ அது போல மனதிற்கும்  உணவுகள் அன்றாடம் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. ஆழ்ந...

ஸ்ரீலஸ்ரீ சுப்பையா சித்தர் -திருக்கழுக்குன்றம்

Image
எம்பெருமானே ..!! ஈசனே ..!! சர்வேஸ்வரனே ..!! காலத்தின் நாயகனே ..!! எம் புயங்கப்பெருமானே ..!! சகலமும் நிறைந்தோனே ..!! தூய வெண்பனி போல  உள்ளத்தை கசியவைக்கும் நின் தார்மீக அன்பெனும் அலைகளால் எம்மை உறையவைத்து, கண்களால் பார்க்கும் தூரம் வரைக்கும்,காதுகளால் கேட்கும் தூரம் வரைக்கும் , ஜடமாகவும் ஜீவனாகவும் காட்சியளித்து ,இன்னும் தாண்டி பார்க்க இயலாத ,கேட்க இயலாத எல்லைகளற்ற  எங்கோ....எங்கெங்கோ....அடர்ந்து படர்ந்த வெளியில் ஊமையாக ,சப்தமற்று ,நிறமற்று ,மொழியற்று கேட்பாரட்று கிடக்கும் ஒன்றுமில்லா ஒன்றோனே..!! அன்பெனும் அலைகொண்டே நின்னை, நின்  பெருமையினை நின் கருணையினை , எல்லா உயிர்களையும் யாவற்றையும் வாரியனைக்கும் நின் மாசில்லா பாசத்தன்மையினை, நுட்பத்தை  அதிநுட்பத்தை ,எண்ணி எண்ணி பெருமை கொண்டு ,விம்மி விம்மி, விழிகள் பிதிங்கி ,உள்ளம் நெக்குருகி செய்வதறியாது சரணாகதியில் நிற்கின்றோம் ...தூயோனே வெட்டவேளியோனே !!ஜோதியில் ஜோதியே ..!!! ஆதியே ..!! அருள் ஆசிகள் தருவாய் எம்பெருமானே .... என்றென்றும் நின் திருவடியில் வீழ்ந்து வணங்குகின்றோம்.!! எவ்வளவு தான் கற்றறிந்தாலும் அனுப...

எமை ஈர்த்த மகான்

Image
இயற்கை தம்மை தாமே சீர் செய்துகொள்ளும் நிகழ்வு .யாரும் கணிக்க இயலாது நடந்தேருகிறது . இயற்கை எனும்  சதிராட்ட காரனுக்கு நாமெல்லாம் நகர்த்துகின்ற காய்கள்.எடுப்பான் அணைப்பான் தூக்கி எறிவான் .யார் அறிவார் இவன் திருவுள்ளம் .அண்மையில் நிகழ்ந்த கஜா எனும் கடும் புயல் ஏற்படுத்திய பேரழிவு ,மனதை நிலைகுலைய செய்துவிட்டது .அகத்திய உள்ளங்கள் பலர் இதிலே சிலர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிவிட்டனர்.களத்திலே நேரடியாக இறங்கி உதவி செய்த மற்றும் உதவி செய்துகொண்டிருக்கும் அணைத்து உள்ளங்களுக்கும் அகத்தியம் வலைத்தளம் மூலமாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.எமது இல்லத்திலிலே வளர்ந்த மிக பழமையான  நூறு வயது தாண்டிய மரம் ,சுத்தமாக வேரோடு பிடுங்கி எறியப்பட்டது .இனிமேல் இப்படி ஒரு மரம் வளர்க்க இயலாது.தூக்கி நிறுத்தி மீண்டும் வளர தேவையான வேர்கள் எல்லாம் சுத்தமாக முறிந்துவிட்டது.இனி வரும் தலைமுறை பார்க்க நூறு ஆண்டுகள் ஆகும்.இந்த மரங்களோடு அதன் கிளைகளிலும்,குதித்தும் ஆடி,நிழலிலும் ,ஓடி ஆடியும், விளையாண்ட சிறுவயது நிகழ்வுகள் எல்லாம் அப்படியே இருக்கிறது.ஆனால் மரம் மட்டும் தற்போது இயற்கை எடுத்துக்கொண்டது.இதை விட...