Posts

இறை தேடும் பயணத்தில் !!! ...(பகுதி 2)

Image
எமது  ஆன்மீக ஆரம்ப காலகட்டம் ,மகான்களையும் ,சித்தர்களையும் அவர்  தம் ஜீவசமாதிகளையும்  தேடித்தேடி அலைந்த  காலம் அது.பொருள் இல்லாத  பொழுது  அருள்  தேடி  அலைந்த  காலம் .அவர் ஒரு பிரசித்தி பெற்ற மகான்,அன்பும்  கருணையும்  நிறைந்தவர் ,எம்மை போன்ற பல உள்ளங்களின்  நெஞ்சம்  கவர்ந்தவர் , நேரில்  பார்த்து அவர் அருளாசி  பெறவேண்டும் என்று  விரும்பி நெடுந்தூரபயணம்  செய்தோம்  அன்று .நேரில் சென்று  அருகில்   பார்த்தபோது  எந்த  ஒரு அனுபவமும் எமக்கு  அகத்தியம் blog  ஏற்படவில்லை .மகான்  எப்பொழுது  தம்மை  கூப்பிடுவார் என்ற  ஏக்கத்தோட இருக்கும் ,மக்கள்  கூட்டம்  அவர் முன்னே  எப்பொழுதும் காத்துக்கிடந்தார்கள் . எம்மையும்  அழைத்தால் யாம் பெரும் பாக்கியம்  செய்தவனாவேன் ஆனால்  யாமோ  சிறு தூசி .எப்படி  எம்மை  அழைப்பார் ?  எனவே யாமே  சென்று  வணங...

கருணா ஸாகரம் - ஸ்ரீ லலிதாம்பிகை

Image
வில்லெனும் புருவமும்  வேல் விழி கண்களும் சொல்லெனும் அமுதமும்  சுடர்ஒளி பார்வையும் அன்பெனும் ஞானமும்   அட்டமா சித்தியும் தன்னுள்ளே கொண்ட  தாயவள் பொற்பாதம்பணிய மின்னிடும் தேகம்  மிரன்டோடும் வினையாவும் உன்னுள்ளே கண்களும்    உருகும் விழிநீர்கொண்டு மெய்யுள்ளே அகந்தை  மெதுவாக சாகும் பாரீர் பொய்யில்லை உண்மை   பொற்பாதம் பணிந்துபாரீர் ஸ்ரீ லலிதாம்பிகை தாயவள்  எப்படி   இருப்பாள் ,அவளை எவ்வாறு தியானிக்கவேண்டும் என்பதை தத்தாத்ரேயர், ஆதிசங்கரர் போன்ற மகான்கள், தம் ஞானத்தால்  அறிந்து,வியந்து ,அதை யாவரும்  உணரும் வண்ணம், அவர் தம் அருளிய வார்த்தைகளால் மிளிரும் ஸ்லோகமே அருணாம் கருணாதரங்கிதாஷீம்  என தொடங்கும் ஸ்ரீ லலிதாசகஸ்ரநாம ஸ்லோகத்தில் வரும் தியான ஸ்லோகம்.இந்த ஸ்லோகம் நிறைய மகான்கள் பெற்ற ஞானத்தை அள்ளிவீசுகிறது.ஸ்ரீ லலிதாம்பிகை தாயவள்  பாதம் போற்றிட,அவள் போட்ட பிச்சையால்,   யாமே எம்முள்ளே அழுது புரண்டு ,விம்மி ததும்பி ,  தாயவள் அருள் கருணை அலைகளை தேடி தேடி அலைந்து கொண்டிருக்கும் பயணத்தில...

அப்பன் வேங்கடேச பெருமாள் கோவில் - திருமுக்கூடல்

Image
உள்ளம்  இறையின்  உறைவிடம் . உள்ளம் எனும் அகம்  எப்பொழுதும் தூய்மையுடன் வைத்திருத்தல் என்பது மிக அவசியமாகிறது.உள்ளம், அகம், நெஞ்சம் எல்லாம் ஒன்றே .எல்லாம் ஒன்றை மட்டுமே வைத்திருக்க தகுதிபெற்றிருக்கிறது.இறை எனும் ஆற்றல் மட்டுமே அகத்தினை ,உள்ளத்தினை உயர்வுறசெய்கிறது. இறை எனும் ஜோதி, இறை எனும் உயிர் ,ஜோதியாய் ,உயிராய், உள்ளே மிளிர்கிறது.உடம்பும் யாம் இல்லை உயிரும் யாம் இல்லை மனமும் யாம் இல்லை ,உண்ட உணவினை செரிக்கும் வேலையும்  யாம் செய்யவில்லை,கோடிக்கணக்கான செல்களை இயக்கி கண்களை இயக்கி எதையும் பார்க்கவைக்கும் வேலையையும் யாம் செய்யவில்லை,செவியை இயக்கி கேட்கவைக்கும் வேலையும் யாம் செய்யவில்லை..இவை யாவும் யார் எம்முள் செய்யவைக்கிறார்கள்..யார் அந்த அற்புத சக்தியின்  மூலகாரணம் ..? என என்னும் போதே இறை சூழ்கிறது.  எதுவுமே யாம் இல்லை ,எம்மால் எதுவும் ஆனதில்லை இனியும் ஆகபோவதில்லை.எம்முள்ளே இயங்கும் கோடான கோடி செல்களை உருவாக்கியும் ,பஞ்சபூத ஆற்றலை அவைகளுக்கு வழங்கியும் ,காத்தும் அரவணைத்தும்  இயக்கிகொண்டிருக்கும் ஒரு அற்புத பேராற்றலின் ஒரு அங்கமே யாம்.இப்படி ஒர...

ஸ்ரீ ராமநாதீஸ்வரர் சுவாமி திருக்கோவில் போரூர்.

Image
இறை எனும் சக்தி ,  இறை எனும் வெளி,   இறை எனும்  பேராற்றல் ,இறை எனும் பேரண்ட நாயகன் ,இறை எனும் சிவம், இறை அது தாமாகவே தம்மை தாமே அறியும் பயணத்தில்,   பஞ்சபூதமுதல் ஆறறிவு உள்ள மனிதன் வரை யாவும் ஒரு கட்டமே,  ஒரு நிலையில்லா ஒரு நிலையே.எல்லாமே மாறுதலுக்கு உட்பட்டு ஒன்று மற்றொன்றாய் மாறி மாறி  இறை தம் பயணத்தில் தொடர்ந்துகொண்டேஇருக்கிறது.இழந்த நொடிகள் மீண்டும் வருவதில்லை,இருக்கும் இந்த நொடியை மிக கவனமாக அதில் வாழ்ந்துவிடுவதே மிக சிறந்தது. இறை அது தாமே தம்மை அதிக அழுத்தத்திற்கு உட்படுத்தி ,தாமே ஒரு மிக சிறிய அணு எனும் அளவிற்கு தன்னிச்சையாக மாற்றம் பெற்று ,அதே பேராற்றல் தாம் உருவாக்கிய அணுவினை எல்லா பக்கங்களிருந்தும் அழுத்தியும் சூழ்ந்தும் அதனை சுழலவைத்தும் ,இப்படியே எண்ண இயலா கோடான கோடி அணுக்களை உருவாக்கி,அதனை அழுத்தி சுழலவைத்து, தமது அடுத்தடுத்த நிலைகளை ,வடிவங்களை பெற்று ,ஆகாயமாகவும் ,காற்றாகவும்,நெருப்பாகவும்,நீராகவும்,நிலமாகவும்  உருவாக்கி ,அதிலிருந்து ஓர் அறிவு உடைய உயிர் முதல் ஆறு அறிவு உடைய மனிதன் படைத்து தமது ஒன்றுமில்லா ஒன்றிலே இருக்க...

ஸ்ரீ தாயுமானவர் - திருச்சிராப்பள்ளி

Image
மார்கழி  மாதம்  இயற்கையிலேயே அதிக ஈதர் நிறைந்த, சுத்தமான காற்றினை அதிகாலை வேளையில் அள்ளி தூவும் காலம்.திருப்பாவையும் திருவெம்பாவையும் அதிகாலை வேளையில் கேட்பதே ஒரு தெய்வீக சுகம்.அதுவும் ஒருவர் கோவிலில் அழகிய மெட்டுகளில் பாடுவதும் அதை கேட்பதும் ஒரு தனி சுகம்.பனி ஒருபுறம் இருந்தாலும் அதிகாலை ஸ்நானம் செய்து பெருமாளையோ ,சிவபெருமானையோ வணங்குவது அதி உன்னதமானது. காவிரியில் நீராடி   நடந்தே  வடகரைக்கு அருகில் உள்ள ஸ்ரீரெங்கநாதரையும் , தென்கரைக்கு அருகே உள்ள மலைக்கோட்டை தாயுமானவ ஸ்வாமிகளையும் தரிசனம் செய்தார்கள் அந்த காலத்தில்.காவிரியில் நீர் வரும் பொழுது குளித்துவிட்டு , குறைந்தபட்சம் வாகனத்திலாவது சென்று பெருமானை வணங்க வேண்டும் இக்காலத்தில். சிராப்பள்ளியின் பரபரப்பான  பகுதியாகிய மெயின்கார்டு கேட் தாண்டி உள் செல்ல, மலைக்கோட்டை அடிவாரத்தில்   மாணிக்கவிநாயகர்  சன்னதி அற்புதமாக இருக்கிறது .ஒரு ஜீவ சமாதியிலிருந்து வரும் ஆற்றல் போல ,இறை அலைகள் சன்னதி முழுவதும் சூழ்ந்து தெய்வீக மனம் கமழ்கிறது.தொழில் ,பணம் ,வேலை சம்பந்தபட்ட பல பிரச்சனைகளை...

ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே ...!!!

Image
பிரபஞ்ச நாயகனே ..!! விஸ்வேஸ்வரனே ..!!! விரிந்து விரிந்து சென்றுகொண்டேயிருக்கும் வெட்டவெளியோனே..!!! காரிருளே !!! கரும்கும்மிருட்டே ..!!! யாவற்றையும் சூழ்ந்து சூழ்ந்து ஈர்க்கும் ஈர்ப்பு விசைக்கு மூலமான ஆதியே ..!!! அங்கிங்கெனாதபடி எங்கும், எங்கெங்கும் வியாபித்திருக்கும், ஆயிரம் ஆயிரம் கோடி சூரிய ஜோதியே ...!!! எப்படி நின் தன்மை உரைப்போம்..எம்பெருமானே ..!! யாவற்றுள்ளும் பிண்ணி பிணைந்து ஊடுறுவி ,யாவற்றுக்கும் அருள் ஆட்சி நடத்தும் அண்டபேரண்ட நாயகனே ..!!!மனம் போன போக்கில் திரிந்து ,கண்களை மூடிக்கொண்டு இவை எல்லாம் நீ கவனிக்க போகிறாயா ? என்று தெரிந்தும் தெரியாமலும் செய்யும் செயல்கள் யாவற்றுக்கும் மூல காரணமான இருந்துகொண்டு ,இம்மிகூட பிசகாமல் ,பலன்களை வாரிவழங்கும் எம் நாயகனே ..!!! எம் பெருமானே ..!!! பேரொளியே ..!!! உள்ளும் புறமும் நீ ..!! எம் உணர்வும் நீ !! உடலும் நீ ..!!! உள்ஒளியும் நீ ..!!நீயே அனைத்தையும் ஆள்கிறாய் ..!! எதுவும் நினது ஆட்சிபுலத்தை விட்டு விலகுவதில்லை.நின்னை அறிந்திடல் கடினம் ,நின்னை அன்பெனும் தன்மையால்  உணர்ந்திடல் எளிது.அன்பாய் எளிதாய் ஆத்மரூபமாய் இருக்கிறாய்.நுணுகி நு...

ஸ்ரீ மச்சமுனி சித்தர் அய்யா - திருப்பரங்குன்றம்-II

Image
சித்தன் அழைத்தால் தான் சித்தனை பற்றிய அருள் அலைகளை உணரமுடியும்.என்னதான் மனம் விரும்பி வலுகட்டாயமாக சென்றாலும் சித்தன் அழைக்கவில்லை எனில் சித்தரின் தரிசனம் கிடைக்காது.அதிகாலை நேரம் ஒரு கனவு. அதில் ஒரு பெரிய மரம் அதன் அருகே ஒரு மூலிகை செடி அருகே ஒரு பெரிய மலைபாறை ,அதில் அழகிய சித்தர் உருவம் படமாக மிக அழகாக வரையப்பட்டுள்ளது.சித்தரின் பெயர் தெரியவில்லை.அருகிலேயே இருக்கும் மூலிகை அற்புதமான நறுமணம் கமழ்கிறது.சட்டென எழுந்துவிட்டோம் .இன்று ஏதோ ஒரு சித்தரின் அல்லது மகானின் தரிசனம் கிடைக்க போகிறது என்பது மட்டும் தெரிந்தது. ஏதேனும் ஒரு கோவிலுக்கு செல்லலாம் என முடிவுஎடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல ஆயத்தமாகி கிட்டதட்ட ஒரு  மாலை நான்கு மணிக்கு மெதுவாக மலை அடிவாரம் வந்தோம் .சரியான கூட்டம் ,ஏன் என விசாரித்த  போது ,இன்று சஷ்டி ஆரம்பம் ,இன்று முதல் நாள்  ஆதலால் இதோ  இங்கே தெரிகிறதே சரவணபொய்கை அங்கே குளித்து முருகனை தரிசித்து காப்பு காட்டி விரதம் அனுஷ்டிப்பார்கள் என்றனர்.மெதுவாக கடந்து மேல் செல்ல ஆயத்தமானோம்.மலை எங்கும் அதிக அளவ...