Posts

தாய் சக்தி

Image
அண்டசராசரங்களை ஈர்த்து ஆள்பவள்.கருணையே வடிவானவள்.எல்லையில்லா  கருணை  நிறைந்த கண்களால் ,தமை பார்க்கும்  எதையும் எவரையும்  அவர் தம் சூட்சும தேகம் வரை  ஆழ்ந்து உட்சென்று ,அதில் உறைந்த அன்பின் தன்மையை  உணர்ந்து ,ஆத்ம ஒளியை பெருக்கி அருள் ஆசி செய்பவள்..திரிகால ஞானம்  கொண்டவள்.பிரபஞ்சத்தில் மிக பிரமாண்ட  கோள்களானாலும் சரி ,மிகச்சிறிய அனுவானாலும் சரி எதுவும் இவள் ஆட்சிபுலத்தில் இருந்து தப்புவதில்லை.நுணுக்கமும் தெளிவும் நிறைந்த பேரொளியாள் அனைத்தையும் ஈர்த்துப்பிடித்து அருள் ஆட்சிசெய்பவள்.அன்பு நிறைந்தவள்.சாந்த ஸ்வரூபி.சகலவித்தைகளுக்கும் அதிபதி.பிரமாண்ட விஸ்வரூபம் கொண்டவள் ஆதி சக்தி ,அன்பின் நாயகி ,அம்பாள் , அகிலாண்டபரமேஸ்வரி , ராஜராஜேஸ்வரி ,திரிபுபன நாயகி  என பல நாமங்களுக்கு சொந்தம் கொண்டவள் .!தாய் எனும்  பெரிய  ஸ்தானதிற்கு  இவளே மூலம்.இவள் கருணையாலே மற்ற எந்த ஒரு உயிரும் தாய் எனும் அங்கீகாரம் பெறுகிறது. சிவனை பற்றி  அறிந்து கொள்ளுதல் எவ்வளவு தெளிவை நம் வாழ்வில் ஏற்படுத்துமோ அந்த அளவிற்கு சிவனின் மற்றொரு வடிவமாகிய சக்தியை ...

சூட்சுமங்கள் நிறைந்த ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் !!!

Image
சென்னை மாடம்பாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தேனுபுரீஸ்வரர்  கோவில்  மிக பழமையான ஒரு அற்புதமான கோவில்.கபில  முனிவர் சிவனை இடது கையால் ஆராதனை செய்ததற்காக  பசுவாக (தேனுவாக) பிறந்து சிவனை வழிபட்டு  இங்கே சாபவிமோச்சனம் அடைந்ததாகவும் ,சோழப்பேரரசர் தம் கனவில்இங்குள்ள ஏரியில்  சுயம்பு லிங்கம் இருப்பதை கண்டு ,இந்த அழகிய கோவிலை கட்டியதாகவும், அருணகிரிநாதர் இத்திருத்தலத்தை "தோடுறுங் குழையாலே...." என பாடியுள்ளதாகவும் வரலாறு சொல்கிறது .இப்படி நீண்ட நெடிய வரலாறு தொடர்கிறது.வலைத்தளத்தில்  நிறைய தகவல்கள் கொட்டிக்கிடக்கிறது.படித்து பயன் பெருக .!! இங்கே எமது அனுபவத்தை மட்டுமே எழுதுகிறோம். ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் சிறிய சுயம்பு லிங்கமாய் மிக அழகாக  காட்சிதருகிறார்.கருவறை முழுவதும் நல்ல தூய வெண்மையானஆற்றல் நிறைந்த அலைகள் நிறைந்து,தம்மை வந்து வணங்குவோரின் ஆக்னாசக்கரத்தை தொட்டு உரசிச்செல்கிறது.கஜபிருஷ்ட வடிவில் உள்ள கருவறை என்கிறார்கள்.எல்லாம் சிவனின் தார்மீக அலைகள் ஆட்சிசெய்கிறது. கருவறைவிட்டு வெளியே வந்து ஸ்ரீ தேனுகாம்பாள் தாயாரை வணங்கி வ...

மகான் நாகமணி அடிகளார் அய்யா ஜீவசமாதி - பெருங்குடி சென்னை.!!!

Image
கருணை என்பதை நம்மில் எத்தனைபேர் அதன் முழுத்தன்மையை உணர்ந்திருக்கிறோம்.கருணை என்பதை ஒரு வார்த்தை கொண்டு அடக்க இயலுமா ?கருணை என்ற ஒரு வார்த்தை ஓர் அளவுக்கு அதன் தன்மையை அதன் ஆற்றலை உணர்த்துகிறது.ஆனால் உணர்ந்தால்  தான் இந்த ஒரு வார்த்தையின் தாத்பர்யம் இவ்வளவு பெரியதா  என புரிகிறது.வார்த்தைகொண்டு வர்ணிக்க இயலாதுகருணையின் ஆற்றலை. எல்லா தெய்வங்களும் கருணையின் பிறப்பிடம் ,கருணை கடல் போல் கொட்டிக்கிடக்கிறது.எல்லையற்ற கருணை உடையவர்கள் மகான்கள்.எல்லா மகான்களும்  கருணையின் வடிவம்.எல்லா மகான்களிடமும் கருணை என்னும் ஆற்றல் ததும்பி வழிகிறது.கருணை  என்பதை நன்கு  உணர்ந்து உள் கடந்து சென்றால் தான் அதன் வீரியம் புரியும்.இதை உணர்ந்துவிட்டால் அங்கிருந்து அன்பெனும் அலைகள் சூழ்ந்துகொள்ளஆரம்பித்துவிடுகிறது. இன்னும் கொஞ்சம் இப்படியே இதன் அலைகள் பிடித்தால் அன்பின் அலைகள் தாண்டி இறைஅலைகள் சூழ்ந்துகொள்கிறது.கருணையும் அன்பும் ஒன்றை ஒன்று பிரிக்க இயலாது.கருணை உள்ளம் கொண்டவர்கள் அன்பால் அன்பின் அலைகளால் அருள் ஆசி வழங்குகிறார்கள்.எந்த எதிர்பார்ப்புமின்றி தம்மை நோக்கி வரும் அன்பருக்கெல்...

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்

Image
அழகிய முகமும் சாந்த வடிவும்,அன்பும் கருணையும் நிறைந்தவர்.சித்த ரகசியமெல்லாம் உடைத்தெறிந்தவர்,.மனிதர்களுக்காக தம் நிலை இறங்கிவந்து தாம் பெற்ற நுணுக்கங்கள் ஆற்றல் நுட்பம் அறிவு கொண்டு பேருதவி செய்தவர்.இரக்க குணம் உடைய தயாளன்! எல்லையில்லா கருணை நிறைந்த சித்தர் ஸ்ரீ கோரக்கர் சித்தர் ! ஸ்ரீ கோரக்க மஹாசித்தர்.! இன்றும் திருப்புவனம் கோரக்கநாதர் கோவிலில் இருந்துகொண்டு அருள்ஆசிகள் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள் !!! கோரக்கர் ஒரே நேரத்தில் பல இடங்களில் ஜீவசமாதியாகி இருக்கிறார்கள்.அப்படி ஒரு இடம் தான் இந்த திருப்புவனம் .இங்கே உள்ள ஆதி கோரக்கநாதர் ஆலயம்.மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் அதாவது மதுரையிலிருந்து 20 km லில்  உள்ளது திருபுவனம் .செவிவழி நிறைய தகவல் கிடைகின்றது.இங்குள்ள ஸ்ரீ புஷ்பவனேஷ்வரரை சந்திக்க வந்த கோரக்கர், சிவனை சந்தித்து  இறைஅலையில் மூழ்கி,அருகிலேயே ஒரு ஆஷ்ரமம் அமைத்து சிவஅருள் தொண்டு செய்துவந்திருகின்றார்கள் என்கிறார்கள். மச்சேந்திரர் எனும் மாபெரும் முனிவர் இறைவழியே தம் வாழ்கையை செலுத்தி,தொடர்ந்து கால்நடையாக பல திவ்விய தேசங்களுக்கு சென்று அங்குள்...

ஸ்ரீ ருத்ரம்..!!!

Image
நண்பர் ஒருவருக்கு ஒரு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது.பொருளாதார பின்னடைவு,தொழில் வளர்ச்சி இல்லை, மன உலைச்சல்,உடல் நல குறைவு,ஏழரைநாட்டு சனி ,என அடுக்கடுக்கான நிறைய சிக்கல் .எங்கு சென்றாலும் ஏதாவது ஒரு வழி தென்படுமா ? என தேடி தேடி அலைந்து ஒரு வழியாகிவிட்டார்.எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது.கர்மவினை கழிவது என்பது சாதரண விசயம் அல்ல. அதைஅனுபவிப்பவர்களுக்கு தான் தெரியும் அதன் வலி.இது போன்ற காலங்களில் முதலில் நமக்கு தேவைப்படுவது அசைக்கமுடியாத மனம் மற்றும் இறைவழிபாடு. (A Strong Solid Mind and Divine Worship ).இல்லை எனில் வாழ்வு என்பது மிக கடினமாகிவிடும் . நண்பருக்கு ஆறுதல் சொல்லி ,இறை வழியில் மனதை ஈடுபட செய்தோம்.ஒரு சில வழிகளில் அவர் மனதை கொஞ்சம்  கொஞ்சமாக மாற்ற முயற்சி செய்தோம்.ஸ்ரீ ருத்ரம் படிக்க சொன்னோம். அவர் செய்த புண்ணியம் அடுத்த நாளே பிரதோஷம்,ஒரு லிட்டர் பால் வாங்கி சென்று ,சிவனுக்கு நடக்கும் அபிஷேகத்தில் கலந்து கொண்டோம்,அங்கேயே அமர்ந்து மனதை சிவ வழியிலேயே செலுத்தவிட்டோம்.நண்பர் மனம் துள்ளிக்குதிக்க ஆரம்பித்தது.ஏதோ ஒரு நம்பிக்கை தற்பொழுது அவர் மனதுள் எழுந்ததை உணர்ந்தோம்.பிரச்சி...

தந்தை தரும் தமிழ் ஞானம் !!!

Image
அய்யாவின் பாடல்களை ஆழ்ந்து படிக்கும் போது ,ஒரு வித அலை எங்கோ இழுத்துச்செல்கிறது .எத்தனையோ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழைமைக்கு அழைத்து செல்கிறது. அது  தமிழ் கொஞ்சிவிளையாடும் காலம் .தமிழ் என்றால்  இன்று நாம் பேசும் தமிழல்ல. தூய தமிழ்,  நுனி நாக்கு பிறழ்கிறது.அந்த தமிழை கேட்கவே ஒரு வித ஈர்ப்பு வருகிறது.இப்படி ஒரு தமிழா என்று வியக்கும் அளவிற்கு ,மிக அழகிய தமிழ் ,பசுமை தமிழ், அன்புத்தமிழ், கொஞ்சும் தமிழ், செந்தமிழ் ,மெல்லிய தமிழ்,அமுதம் சுரக்கும் தமிழ்,இனிமை கொஞ்சும் தமிழ்.ஆழ்ந்து கவனிக்க இறைஅலைகள் வார்த்தைகளாக தமிழ் மொழி மூலம் தெறித்து மொழியாக வார்த்தையாக துள்ளி  உருண்டு ஓடுகிறது. அன்பும் சத்தியமும் நிறைந்த ஒரு காலம்.உண்மை மட்டும் உலகை ஆண்ட காலம்.இயற்கை  நறுமணமும் ,தூய காற்றும் ,மூலிகை வளமும் நன்கு நிறைந்த செல்வ வளம் நிறைந்த ஒரு காலம். எவர் நினைக்கும் எண்ணமும் தூய அலையாக ஆங்காங்கு சுழன்று செல்லும்,அதன் தன்மை பிரித்து இது இவர் உடையது தான்  என்று பிரித்து சொல்லும் அளவுக்கு சூழல் தூய்மையாக உள்ள ஒரு காலம்.எழில்கொஞ்சும் இயற்கையோடு இயற்கையாக இறைநிலைக்கு அடுத்த நிலையாய்...

அன்பின் ஒரு துளி !!!

Image
ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன் எமக்கு   எப்பொழுதெல்லாம் ஒரு சிக்கல் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் ஒரு பெரியவரை சந்திக்க முற்படுவோம்.ஆனால் அவரை பார்ப்பது  என்பது அவ்வளவு எளிதல்ல .பார்த்தவுடனே எதற்காக  நீ இங்கே வந்திருக்கிறாய் ?... ஒ இது தானா விஷயம் , தெளிவான உமது நாட்கள் ....அதோ தெரிகிறது.அது வரை அமைதி காத்திரு , இதோ யாம் சொல்லும் இதை செய் ...சத்குரு அருளினால் துயர் நீங்கும் ..ஜெய் சத்குரு.....என பிரித்து சுக்கு நூறாக கூறு போட்டுவிடுவார்.அவர் தற்பொழுது இல்லை.ஆனால் அவர் எமக்கு சொல்லிகொடுத்த ஒரு பயனுள்ள தகவலை இங்கே பகிர்கிறோம். கண்களை மூடிக்கொண்டு உன்னுள் ஓடும் சுவாசத்தை அதன் போக்கிலே எவ்வாறு உள்ளும் புறமும் செல்கிறது என்பதை மெதுவாக அதன் போக்கிலே கவனி, உன் மன ஓட்டம் குறையும்.மனதின் அதிர்வு அலை (frequency) குறையும்.பிறகு அவ்வாறு மேலும் கவனிக்க  சுவாசம் இடதுபுறமும் வலது புறமும் மாறி மாறி செல்லும்,மன அதிர்வு அலை மேலும் குறைய குறைய,சுவாசம் மிக மென்மையாய் மாறிவிடும்,இப்படி சுவாசம் மென்மையாய் (very subtle) மாறிவிடின்,சுழுமுனை ஆரம்பிக்கும் (சுவாசம் இரு புறமும் செல்லும்...