Posts

இறை தேடும் பயணத்தில்...!!!

Image
மனம், இறைவன் வந்து அமரும் இடம்.என்றும் மிக உயர்ந்த நிலையில் இருத்தல் அவசியமாகிறது.அகண்ட பிரபஞ்சம் போல ,ஆழ்ந்து அகன்று விரிந்து  இருந்தால் அளவிலா ஆனந்தம் சூழ்கிறது.இல்லைஎனில் மாறான விளைவுவருகிறது.அகத்தே ஆராய்ந்து ஆராய்ந்து தேவை இல்லாத குப்பைகளை எல்லாம் தூக்கி எறிய எறிய,  மனம்மேலும் மேலும் உயர்வு பெறுகிறது.இறைஅலைகள் என்பது ஒரு இலவம் பஞ்சுபோல எடையற்ற ஜீவ அலைகள்,எந்த உருவமும் கிடையாது,எந்த வடிவமும் எடுக்கும் இந்த அலைகள்.இறைவன் உள்ளத்தில் அமர்ந்தால் மகிழ்ச்சி கரைபுரண்டோடுகிறது. எவர் உள்ளத்திலும் வந்து அமருவான் இறைவன்.இவன் தன்மை யாதெனில் ,இவனுக்கு எதுவும் சொந்தமில்லை ,யார் தம்மை அழைத்தாலும் பாரபட்சமின்றி வந்தமருவான் ,எத்தனை கோடி ரூபாயும் ஒன்றுதான் எங்கிருக்கும் எதுவும், எந்த ஜடமும், ஒன்றுதான். எதுவும் இவனுக்கு பெரிய விசயமில்லை,யாவரும் தம் பிள்ளைகளே,எந்த ஒரு விருப்பும் கிடையாது,வெறுப்பும் கிடையாது.இவன் வந்தால், என்னே ஒரு மகிழ்ச்சிகொள்கிறது இந்த மனம் !,இவனை பற்றி அறிய முற்படும்போதே ஒரு அமைதி சூழ்ந்துகொள்கிறது.எங்கோ மழை அடித்தால் ,இங்கே வரும் குளிர்காற்று போல ,இவன் நறுமணம் ,...

நெஞ்சமெனும் புதினம் ...!!!

Image
எந்த அளவுக்கு உள்ளம் தூய்மையாக இருக்கிறதோ அந்த அளவுக்கு உள்ளத்தில் மனதில் தெளிவும் அமைதியும் சூழ்ந்துகொள்கிறது.எந்த அளவுக்கு தெளிவு இருக்கிறதோ அந்த அளவுக்கு வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கிறது.கர்ம வினையும் கோள்கள் ஆட்சியும்,புண்ணியத்தின் குறைபாடும் இந்த மனதினை சும்மா பந்தாடிவிடுகிறது.பெருத்த அளவில் சம்மட்டி அடி வாங்குவதும், இந்த உள்ளத்தில் தான், இந்த மனதில் தான்,அதே போல்,மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து தாண்டவம் ஆடுவதும் இந்த உள்ளத்தில் தான், இந்த மனதில் தான்.எவ்வளவு தான் தெளிவாக இருந்தாலும் ,ஒரு சில அன்றாட நிகழ்வுகள்,செயல்கள்,தம் எண்ணஅலைகள், இவை யாவும் இந்த மனதினை துவம்சம் செய்துவிடுகிறது.இங்கே வெற்றிபெற்றால் அனைத்தும் சொர்க்கமே.இல்லை எனில் எண்ண சிக்கலில் நன்கு மாட்டவைத்து  பெற்ற சக்தியை இழந்துகொண்டே இருக்கவேண்டியதாகிறது. தினந்தோறும் தூய்மை என்பது மிக மிகஅவசியமாகிறது.பாத்திரத்தில் உள்ள அழுக்குகளை கழுவுவது போக, உள்ளத்தில்  உள்ள  குப்பையான எண்ணத்தை தினந்தோறும் வெளியேற்றுதல் என்பது அவசியமாகிறது.இதற்கு நிறைய வழிகள் உள்ளது.எது நமக்குபிடிக்கிறதோ அதனை பின்பற்றி தூய்மை செய்தல் நல...

சிவ தரிசனம்...!!!

Image
சிவம் எதற்கும் ஒரு மூலம் இவன். எதுவும் இவனுள் அடங்கும் .எங்கும் இவன் இருப்பான் .எவையும் இவனிடமிருந்தே பெறப்பட்டது.மாபெரும் பிரபஞ்ச ஆற்றல் இவனே .இவனே கூனி குறுகி ,தம் எல்லா ஆற்றலையும் ஒரு சிறு புள்ளியில் வைத்து,பிறகு அதே அச்சிறு புள்ளி தம்மை ,விரிவாக்கி அண்ட சராசரமாக விஸ்வரூபம் எடுத்து   தம்மை எங்குமாக வியாபிக்கும் தன்மையும் இவனே .இவனே மாற்றம். ஒன்றதை மற்றொன்டாக மாற்றிக்கொண்டே எதற்கும் ஒரு நிலையை நிரந்தரமாக தர மாட்டான் .இவன் ஒருவனே நிலையானவன்.இவனே அகம் .இவனே பிரம்மன்.இவனே விஷ்ணு. இவனுள் இருந்துதான் மற்ற அனைத்து தெய்வங்களும்.இவனை இவனுள் உணரும் ஒரு பயணத்தில் ஒரு கட்டம்(phase) தான் நாம் காணும் எந்த ஒரு ஜடமும் எந்த ஒரு உயிரும்.இவனை இவனே உணர்வது தான் முழுமை. இவன் தந்த மனதால் ,இவன் நாமம் புகழ் பாடி, இவன் நாமம் உணர்ந்து,நெகிழ்ந்து, இவனை இவனுள் உணர ,உருவாகும் ஒரு பேரானந்தம்.முழுமை ,தெளிவு,அமைதி,வார்த்தைகளுக்கு அகப்படாத ஒரு பேரின்பநிலை. இவனை உணர இவன் தந்த ஒரு மிகச்சிறந்த ஒரு கருவி இந்த மனம் .இந்த மனம் இவனை உணராத ஒரு நாளும் வீணே.எங்கும் பெருக்கெடுத்து வியாபிக்கும் தன்மை கொண்ட மனம்...