Posts

ஸ்ரீ ராம தேவர் சொரூப சமாதி

Image
அன்புள்ளம் கொண்ட அகத்திய நெஞ்சங்களை நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும்  சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். கால  தாமதத்திற்கு வருந்துகிறேன்.ஸ்ரீ மஹா பைரவர்  கட்டுரையில்  வரும்  பைரவ மந்திரம் சக்தி மிகுந்த நல்ல அதிர்வு அலைகளை தரக்கூடியது. சூட்சும சக்தியை பெருக்கக்கூடியது. நம் சூட்சும உடம்பிலே ஒரு polish  ,இறை சக்தியால் ,பைரவ சக்தியால் மெருகேற்றப்படுகிறது. எப்பொழுதும் நம்மை தொட்டுக்கொண்டே,எங்கெங்கு சென்றாலும் நம்முடனேயே வருவது நம்  சூட்சும உடல்.நல்ல  அதிர்வு  அலைகள்  நமக்கு  எப்பொழுதும்  நல்ல எண்ணங்களை  தரவல்லது .  இந்த சூட்சும உடல்    எந்த அளவுக்கு ஒருவருக்கு செறிவுள்ளதோ அந்த அளவுக்கு, மனம் நன்கு  வலிமை பெரும் ,நல்ல  திடம் பெறும் ,நல்ல நிறைவு  பெறும்.நல்ல திடமான ,அலைபாயாத நல்ல ஆரோக்கியமான மனதில் தான்,ஒரு தீர்க்க மான முடிவு  எடுக்க முடியும்.நல்ல சரியான முடிவு  எடுக்க தெரிந்தவர்கள் தான் வாழ்க்கையின் உயர்நிலையில் .இன்றைய உலகத்திற்கு மிக மிக  அவசியமானது,இந்த  மிக சரி...

ஸ்ரீ மஹா பைரவர்

Image
ஸ்ரீ மஹா பைரவர்  மிக சக்திவாய்ந்த ஒரு கடவுள் .ஒரு மிக உக்கிரமான அதிக ஆற்றல் வாய்ந்த ஒரு சக்திமிக்க அலை வடிவம் .சிறிது பயபக்தியுடனே இக்கட்டுரை எழுதுகிறேன்.சிவபெருமானின் பூத கணங்களில் மிக முக்கியமானவர் .ஸ்ரீ மஹா பைரவரை வணங்கினால் 100% பலன் கைகூடும் என்பார்கள் .தேய் பிறையில் வரும் அஷ்டமியில் ஸ்ரீ மஹா பைரவரை வணங்குவது மிகுந்த விஷேசம். மணி ,மந்திரம், ஓளஷதம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஸ்ரீ மஹா பைரவரின் அருள் இன்றி அறிந்து கொள்ள முடியாது என்பார்கள் .சித்தர்கள் பாதையில் இந்த மணி ,மந்திரம், ஔஸதம் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது .ஒரு சிறிய மந்திரமாகட்டும் அல்லது  ஔஸதமாகட்டும் அது சித்தி பெற வேண்டும் என்றால் ஸ்ரீ மஹா பைரவர் அருளாசி இன்றி  முழுமைபெறாது .அனுகிரகம் வேண்டும் அது இருந்தால் தான் மணி ,மந்திரம் தெரிந்துகொள்ள முடியும் என்பார்களே ,அந்த அனுகிரகத்தை அருள்பவர் ஸ்ரீ மஹா பைரவர் .காலம் காலமாக நமக்கு முன் எத்தனையோ தலைமுறைகள், பைரவ சக்தியின் அளப்பரிய ஆற்றல் கண்டு வியந்து  வணங்கிய ஒரு காலம் ,அங்கே ஒரு  மி...

நெஞ்சம் ஈர்த்த வேம்பு

Image
கர்ம வினையின் செயல்பாடுகள் ,கால மாற்றத்திற்கேற்ப,கோள்கள் இடமாற, அதனதன் பூர்வ ஜென்ம புண்ணியங்களை,பாவங்களை எங்கெங்கு எவ்வாறு செயல் படுத்தமுடியுமோ அதனை  அவ்வாறே அச்சு பிறழாமல்  செயல் படுத்திவிடுகிறது.கர்ம பதிவிற்கேற்ப பலன்களை கொடுத்தே செல்கிறது.எதையும் விட்டுவைப்பதில்லை.புண்ணியங்களால் மனம் மகிழ்ச்சியடைகிறது .பாவங்களால் மனம் வேதனை அடைகிறது . இரண்டையும் சமமாக ஏற்றுகொள்பவன் ஞானி.மற்றவர்க்கு வேதனையிலிருந்து மீண்டுவெளிவர இங்கே ஒரு உதவி  தேவைப்படுகிறது.தெய்வீக அலைகள் ,மகான்களின் அருள் அலைகள் கர்மவினைகளுக்கு ஒரு விதிவிலக்கு .இந்த அருள் அலைகள்  எந்த அளவுக்கு செறிவு  உள்ளதோ   அதற்கு தக்கவாறு வினைபதிவுகளின் தாக்கத்தை  சற்று குறைவாக்கி மனதிற்கு ஒரு நிம்மதியையும் ஒரு மகிழ்ச்சியையும் அளிக்கிறது .  தந்தையின் தெய்வீக அருள் தரிசனம் பெரும் முன் ,ஏனென்றால் இப்போது தந்தையின் அருள் அலையின் அரவணைப்பில் உள்ளேன். ஆதலால் எண்ணும் எண்ணமும் செய்யும் செயலும் தந்தையின் ஆட்சிபுலத்தில்.அகத்தியத்திற்கு முன் , பல ஆண்டுகளுக்கு முன் ,ஒரு நாள் ஒ...

ஸ்ரீ கோரக்கர் தரிசனம்

Image
சித்தர்களும் முனிவர்களும்  போற்றி வழிபட்ட தெய்வம் .சித்தர்கள் வேண்டியபடி,வேண்டிய அனைத்து  வரங்களையும் தந்து அருளியவள் இந்த தாய் . ஒவ்வொரு மனித உயிர் உள்ளும் நிறைந்திருப்பவள்.ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு கொடுப்பது போல , எக்காலத்தில் ,என்ன வேண்டுமோ அதை அறிந்து அருள் செய்பவள். அன்பும்  கருணையும் நிறைந்த குழந்தை வடிவான தாய்  ஸ்ரீ பாலதிரிபுரசுந்தரி பாதம்  போற்றி இக்கட்டுரையை சமர்ப்பிக்கின்றேன் சதுரகிரி பயணம் ஒவ்வொரு முறையும்  ஒவ்வொரு அனுபவம் . சட்டை இன்றி வெறும் வேட்டியுடன் மட்டுமே என்  பயணம்.அப்பொழுது தான்,இந்த மூலிகை காற்று நன்கு உடல் மீது விழும். உலக வாழ்விலே ஈடுபட்டு, பல்வேறு நச்சு வாயுக்களே என் உடலில் மிச்சம்.மலை ஏற,ஏற, இவை எல்லாம் அழுத்தி,நன்கு  கசக்கி பிழியப்பட்டு ,நச்சு வாயுவெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுகிறது.எவ்வளவு அருமையான காற்று ..!  பயணம் செய்தால் மட்டுமே உணரமுடியும். என் குருநாதர் சொல்லுவார் "வருஷம் 365 நாளும் வேலை வேலை என்று கிழிச்சது போதும்,ஒரு நாள் எல்லா...

தான்றில் மரமும் மகானும்

Image
தான்றில் மரம் என்று ஒரு மரம் இருக்கிறது .உலகத்திலே மிக அரிதாக காணப்படும் மரங்களில் இதுவும் ஒன்று.மிக அழகான மரம் ,ஜிவ்வென்று ஓங்கி உயர்ந்து ,இளமையும் துள்ளலையும் தன்னகத்தே உள்டக்கி, வெப்பமான கோடையிலே மிக ரம்மியமாக ,தன்னருகே வருவோர்க்கெல்லாம் பல்வேறு வகையானஆற்றல்களை  வாரி வழங்கும், ஒரு மிக அற்புதமான மரம் . தான்றில் மரத்திற்கும் சனி கோளுக்கும் (Saturn Planet) ஒரு மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது .இது சனி கிரகத்தின் அலைகளை அதிகமாக கிரகிக்கும் தன்மை உடையது .இவைகள் எல்லாம் தனக்கென்று எதையுமே வைத்துகொள்ளும் தன்மை இல்லை .தான் கிரகித்த ஆற்றலை மேலும் சுத்திகரித்து காற்றிலே கலந்து தன்னருகே வருவோர்க்கெல்லாம் வாரி வாரி வழங்கும் ஒரு வள்ளல் மரம் . மாற்றமே வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் ..... என்று திரு மாணிக்கவாசகர் அன்றே தன் ஞானக்கண்ணால் பார்த்திருக்கிறார். இறை என்ற அறிவே உலகத்தில் வெவ்வேறு மாறுதலுக்கு உட்படுத்த பட்டு பொருளாகவும் ,இடமாகவும் ,கோள்களாகவும் ,செடியாகவும் ,மரமாகவும் ,மனிதராகவும் மற்றும் அனைத்துமாகவும் மாறிக்கொண்டே இருக்கிறது .இந்த உலகத்தில் எது நிலையானது ? மாற்றம் மட்டுமே நி...